ஆஷஸ் தொடரில் அதிக ரன் அடிக்கப்போவது அவருதான்.. ரூட்டும் இல்ல ஸ்மித்தும் இல்ல.. டிவில்லியர்ஸ் அதிரடி

Published : Aug 01, 2019, 01:26 PM IST
ஆஷஸ் தொடரில் அதிக ரன் அடிக்கப்போவது அவருதான்.. ரூட்டும் இல்ல ஸ்மித்தும் இல்ல.. டிவில்லியர்ஸ் அதிரடி

சுருக்கம்

வார்னர், ஸ்மித், பான்கிராஃப்ட், கவாஜா, கம்மின்ஸ் என ஆஸ்திரேலிய அணி வலுவாக உள்ளதை போலவே, ராய், ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், வோக்ஸ், மொயின் அலி என இங்கிலாந்து அணியும் மிக வலுவாகவுள்ளது. பவுலிங்கிலும் இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாகவே உள்ளன.   

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி பர்மிங்காமில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.

வார்னர், ஸ்மித், பான்கிராஃப்ட், கவாஜா, கம்மின்ஸ் என ஆஸ்திரேலிய அணி வலுவாக உள்ளதை போலவே, ராய், ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், வோக்ஸ், மொயின் அலி என இங்கிலாந்து அணியும் மிக வலுவாகவுள்ளது. பவுலிங்கிலும் இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாகவே உள்ளன. 

இந்நிலையில், ஆஷஸ் தொடரில் யார் அதிக ரன்கள் குவித்து இந்த தொடர் முழுவதும் அசத்துவார் என டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசி-க்கு பேட்டியளித்துள்ள டிவில்லியர்ஸ், சமகாலத்து தலைசிறந்த வீரர்களாக திகழும் ரூட் மற்றும் ஸ்மித் ஆகிய இருவருமே அதிக ரன்களை குவித்த வீரராக இருக்கமாட்டார்கள் எனவும் தொடரை தீர்மானிக்கும் சக்தியாகவும் அதிக ரன்களை குவிக்கும் வீரராகவும் யார் திகழ்வார் எனவும் டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள டிவில்லியர்ஸ், ஆஷஸ் தொடரில் பேர்ஸ்டோ தான் அதிக ரன்களை குவிப்பார் என்று நினைக்கிறேன். பேர்ஸ்டோ அவரது ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார். தற்போதைய சூழலில் அபாரமான ஃபார்மில் இருக்கிறார். ரூட் மற்றும் ஸ்மித் ஆகிய இருவருமே திறமையான வீரர்கள். ஆனால் இந்த ஆஷஸ் தொடரில் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் இருவருமே திகழமாட்டார்கள் என நினைக்கிறேன் என்று டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். 
 
PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!