படுபயங்கர உற்சாகத்திலும் பிரமிப்பிலும் இருக்கும் ஜோ ரூட்.. காரணம் இதுதான்

By karthikeyan VFirst Published Aug 1, 2019, 1:19 PM IST
Highlights

இங்கிலாந்து அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான ரூட், ஆஷஸ் தொடரில் இந்த முறை முதன்முறையாக செய்யவுள்ள ஒரு சம்பவத்தை நினைத்து பிரமிப்பும் உற்சாகமும் அடைந்துள்ளார். 

கிரிக்கெட்டின் பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் இன்று தொடங்குகிறது. 

முதல் போட்டி இன்று மதியம் 3 மணிக்கு பர்மிங்காமில் தொடங்குகிறது. இரு அணிகளுமே ஆஷஸ் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆடும் என்பதால் இந்த தொடர் மிக விறுவிறுப்பாக இருக்கும். உலக கோப்பையை வென்ற உத்வேகத்தில் இங்கிலாந்து அணி, மிகுந்த நம்பிக்கையுடன் ஆஷஸ் தொடரில் ஆடுகிறது. ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் திரும்பியுள்ளதால் ஆஸ்திரேலிய அணியும் வலுவாக உள்ளது. 

இரு அணிகளுமே வலுவாக உள்ளதால் ஆஷஸ் போட்டிகள் கண்டிப்பாக விறுவிறுப்பாக அமையும். ஆஸ்திரேலியாவிற்கு வார்னர் என்றால், இங்கிலாந்துக்கு ராய், ஆஸ்திரேலியாவிற்கு ஸ்மித் என்றால், இங்கிலாந்துக்கு ரூட் என இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கின்றன. 

இங்கிலாந்து அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான ரூட், ஆஷஸ் தொடரில் இந்த முறை முதன்முறையாக மூன்றாம் வரிசையில் இறங்கவுள்ளார். அதுகுறித்த தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் ரூட். 

ஆஷஸ் தொடரில் முதன்முறையாக மூன்றாம் வரிசையில் இறங்கப்போவது குறித்து பேசிய ரூட், ஆஷஸ் தொடரில் மூன்றாம் வரிசையில் இறங்கப்போவது எனக்கு பிரமிப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. எனக்கு இது பாசிட்டிவான ஒரு நகர்வாக கருதுகிறேன். மூன்றாம் வரிசையில் இறங்கினால் பெரிய ஸ்கோர் அடிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த தொடரில் அதிக ரன்களை குவிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று ரூட் தெரிவித்துள்ளார்.
 

click me!