நாங்க தொலைநோக்கு பார்வையோட செயல்படாம தான் இந்த பசங்கலாம் வந்தாங்களா..? சும்மா ஏதாவது பேசக்கூடாது.. தெறிக்கவிட்ட தேர்வுக்குழு தலைவர்

By karthikeyan VFirst Published Aug 1, 2019, 12:12 PM IST
Highlights

யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்ட பிறகு, அவர் ஆடிவந்த நான்காம் இடத்தை யாராலும் நிரப்பமுடியவில்லை. நிரப்புமளவிற்கு எந்த வீரருக்கும் வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு நீண்டகால நிரந்தர தீர்வை கருத்தில்கொள்ளாமல், பரிசோதனை முயற்சி என்கிற ஏராளமான வீரர்களை இறக்கிவிட்டு, கடைசியில் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட ராயுடுவையும் உலக கோப்பையில் கழட்டிவிட்டது தேர்வுக்குழு. 
 

இந்திய அணியின் தேர்வுக்குழு எந்தவித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் செயல்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், தங்களது தொலைநோக்கு பார்வைக்கு சில எடுத்துக்காட்டுகளை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். 

யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்ட பிறகு, அவர் ஆடிவந்த நான்காம் இடத்தை யாராலும் நிரப்பமுடியவில்லை. நிரப்புமளவிற்கு எந்த வீரருக்கும் வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு நீண்டகால நிரந்தர தீர்வை கருத்தில்கொள்ளாமல், பரிசோதனை முயற்சி என்கிற ஏராளமான வீரர்களை இறக்கிவிட்டு, கடைசியில் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட ராயுடுவையும் உலக கோப்பையில் கழட்டிவிட்டது தேர்வுக்குழு. 

நிரந்தர தீர்வை கருத்தில்கொண்டு வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்காமல் அந்தந்த நேரத்திற்கு என்ன தேவையோ அதற்கேற்ப அணி தேர்வு இருந்ததுதான் அதற்குக் காரணம். அதையும் அணி தேர்வாளர்கள் தன்னிச்சையாகவும் சுதந்திரத்துடனும் தேர்வு செய்யவில்லை. கேப்டன் கோலியின் தலையீடுதான் அதிகமாக இருக்கிறது. அணி நிர்வாகத்தின் கோரிக்கைக்கு ஏற்ப தேர்வுக்குழு செயல்பட்டுள்ளது. 

இதையடுத்து அவ்வாறு செயல்பட வேண்டிய அவசியமில்லை எனவும் தேர்வுக்குழு எடுத்துக்கொடுக்கும் வீரர்களை வைத்துத்தான் அணி நிர்வாகம் ஆட வேண்டும் என்ற உறுதியான மெசேஜை தேர்வுக்குழு தெரிவிக்க வேண்டும் என்பதே அசாருதீன், கவாஸ்கர் போன்றோரின் கருத்து. 

உலக கோப்பை வரை மட்டுமே கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த கோலி, உலக கோப்பைக்கு பின்னரும் கேப்டனாக தொடர்வது குறித்து கருத்து தெரிவித்திருந்த கவாஸ்கர், தேர்வுக்குழுவை கடுமையாக விமர்சித்திருந்தார். நொண்டி வாத்து எனவும், இனிவரும் தேர்வுக்குழுவாவது முதுகெலும்புடன் செயல்பட வேண்டும் எனவும் கவாஸ்கர் சாடியிருந்தார்.

இந்திய அணியின் தேர்வுக்குழு தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவதில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். இதுகுறித்து பேசிய அவர், தொலைநோக்கு பார்வை இல்லாத கமிட்டி என்றால், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடிகொண்டிருந்த பும்ரா, எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலராக திகழ முடியும்..? டி20 வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா, எப்படி மூன்று விதமான போட்டிகளிலும் ஜொலிக்க முடியும்? மயன்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி போன்ற வீரர்கள் எப்படி கிடைத்திருப்பார்கள்? இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை யூனிட்டை பாருங்கள். தேர்வுக்குழு தொலைநோக்கு பார்வையுடன் இல்லையென்றால், எப்படி இவையெல்லம சாத்தியம் என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார். 
 

click me!