33 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த டேவிட் வில்லி – கடைசி உலகக் கோப்பையில் 3 போட்டிகள்!

By Rsiva kumar  |  First Published Nov 1, 2023, 4:11 PM IST

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் டேவிட் வில்லி இங்கிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் இடம் பெற்றார். இதே போன்று நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் இடம் பெற்றார்.

New Zealand vs South Africa: டிம் சவுதியை களமிறக்கிய நியூசிலாந்து – டாஸ் வென்று பவுலிங்!

Tap to resize

Latest Videos

இதுவரையில் 70 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 94 விக்கெட்டுகளும், 43 டி20 போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். தற்போது இந்தியாவில் நடந்து 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்ளி காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்குப் பதிலாக டேவிட் வில்லி அணியில் இடம் பெற்றார்.

மும்பை காற்று மாசுபாடு: உலகக் கோப்பை போட்டியில் பட்டாசு வெடிக்க தடை – ஜெய்ஷா உறுதி!

இங்கிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் வில்லி 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 3 போட்டியில் வெற்றி பெற்றால் கூட இங்கிலாந்து அணியால் அரையிறுதிக்கு வாய்ப்பு செல்ல முடியாது. அப்படி வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து தான் இங்கிலாந்திற்கு அரையிறுதி வாய்ப்பு அமையும்.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான்? இது சாத்தியமா?

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து டேவிட் வில்லி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. ஆனால், அதற்குள்ளாக அவர் இந்த உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து வில்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த நாள் வருவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை. சிறு வயது முதலே இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. எனவே, கவனமாக சிந்தித்து, பரிசீலித்து, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் நான் ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது என்பதை மிகவும் வருத்தத்துடன் உணர்கிறேன். உலகக் கோப்பையின் முடிவு.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

நான் மிகுந்த பெருமையுடன் இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணிந்திருக்கிறேன். உலகின் சிறந்த வீரர்கள் சிலருடன் ஒரு நம்பமுடியாத வெள்ளை பந்து அணியில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மிகவும் அதிர்ஷ்டம். நான்' வழியில் சில சிறப்பு நினைவுகள் மற்றும் சிறந்த நண்பர்களை உருவாக்கி, சில கடினமான காலங்களில் இருந்திருக்கிறேன்.

"என் மனைவி, இரண்டு குழந்தைகள், அம்மா மற்றும் அப்பா ஆகியோருக்கு, உங்கள் தியாகம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவு இல்லாமல் நான் என் கனவுகளைப் பின்தொடர முடியாது. சிறப்பு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும், நான் பிரிந்தபோது துண்டுகளை எடுத்ததற்கும் நன்றி - நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்."

 

 

ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டிகளில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். "நான் எனது சிறந்த கிரிக்கெட்டை விளையாடிக்கொண்டிருக்கும்போது, ​​களத்திற்கு உள்ளேயும், களத்திற்கு வெளியேயும் இன்னும் நிறைய கொடுக்க வேண்டியிருப்பதாக நான் உணர்கிறேன், உலகக் கோப்பையின் போது எங்கள் செயல்பாட்டிற்கும் எனது முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா தொடக்க வீரர் குயீண்டன் டி காக் இந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதே போன்று ஆப்கானிஸ்தான் அணியில் 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!