பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, உலகக் கோப்பை போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் கொண்டாட்டமான பட்டாசு வெடிக்கப்படாது என்று உறுதி செய்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி நாளை பிற்பகல் மும்பையில் நடக்க இருக்கிறது.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான்? இது சாத்தியமா?
இந்த நிலையில் தான் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு வெடிக்கப்படாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உறுதி செய்துள்ளார். மும்பையில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமானது மும்பை மற்றும் டெல்லியில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்படாது என்று கூறியுள்ளது.
மும்பை வானகடே மைதானத்தில் நாளை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதையடுத்து வரும் 6ஆம் தேதி டெல்லியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 38ஆவது லீக் போட்டி நடக்கிறது.
இந்த நிலையில் தான் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மும்பை மற்றும் டெல்லியில் இனி வரும் போட்டிகளில் பட்டாசு வெடிக்கப்படாது என்று கூறியுள்ளார். காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.