தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
புனே மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 32ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பவுலிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில், லாக்கி ஃபெர்குசன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக டிம் சவுதி அணியில் இடம் பெற்றுள்ளார். நியூசிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
மும்பை காற்று மாசுபாடு: உலகக் கோப்பை போட்டியில் பட்டாசு வெடிக்க தடை – ஜெய்ஷா உறுதி!
இதே போன்று தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் ஷம்சிக்குப் பதிலாக கஜிசோ ரபாடா அணியில் இடம் பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா:
குயீண்டன் டி காக் (விக்கெட் கீப்ப்ர), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டூசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், கெரால்டு கோட்ஸி, கேசவ் மகராஜ், கஜிசோ ரபாடா, லுங்கி நிகிடி.
நியூசிலாந்து:
டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீசம், மிட்செல் சாண்ட்னர், மேட் ஹென்றி, டிம் சவுதி, டிரெண்ட் போல்ட்
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான்? இது சாத்தியமா?
இரு அணிகளும் 8 முறை உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 6 முறை நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 2 முறை தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 1996 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கிறது.
இதே போன்று இரு அணிகளும் 71 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 25 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்கிறது. 41 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது. இதில் 5 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.