இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் டேவிட் வார்னர் விழுந்து விழுந்து கேட்ச் பிடித்த நிலையில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பையின் 14ஆவது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி பதும் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
LA 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட விராட் கோலி முக்கிய காரணம் - நிக்கோலோ காம்ப்ரியானி!
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை அணி அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி தொடக்க வீரர்கள் இருவரும் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இதில், நிசாங்கா 61 ரன்கள் சேர்த்த நிலையில், பேட் கம்மின்ஸ் பந்தில் டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Australia vs Sri Lanka: 2 மாற்றங்களுடன் புதிய கேப்டன் தலைமையில் இலங்கை – டாஸ் வென்று பேட்டிங்!
அதன் பிறகு மற்றொரு தொடக்க வீரர் குசால் பெரேராவும் கம்மின்ஸ் பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் ஆடம் ஜம்பா பந்தில் டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த கேட்ச் பிடிக்கும் போது டேவிட் வார்னர் வேகமாக ஓடிச் சென்று பிடித்து கீழே விழுந்த நிலையில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு மழை பெய்த நிலையில், மைதான பராமரிப்பாளர்கள் தார்பாய் கொண்டு வருவதற்கு டேவிட் வார்னர் உதவியாக இருந்துள்ளார்.
மழையின் காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் போட்டியானது தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.