கங்குலி ஐசிசி தலைவராகி எனக்கு வாழ்க்கை கொடுப்பார்..! பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை

By karthikeyan VFirst Published Jun 7, 2020, 5:11 PM IST
Highlights

பாகிஸ்தான் ஸ்பின் பவுலர் டேனிஷ் கனேரியா, கங்குலி ஐசிசி தலைவரானதும், தனது வாழ்நாள் தடையை நீக்க அப்பீல் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
 

அனில் தல்பாட்டுக்கு அடுத்து பாகிஸ்தான் அணியில் ஆடிய இரண்டாவது இந்து வீரர் டேனிஷ் கனேரியா தான். கனேரியா 2000ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் ஆடினார். 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 2012ம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் சர்ச்சையில் சிக்கிய அவருக்கு வாழ்நாள் தடை பெற்ற கனேரியா, அதன்பின்னர் கிரிக்கெட் ஆடவேயில்லை. 

ஐசிசி-யின் தலைவராக கங்குலி நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குநர் க்ரேம் ஸ்மித், சிறந்த நிர்வாகியான கங்குலியால் தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும் என தெரிவித்திருந்தார். 

ஐசிசி தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், கங்குலி ஐசிசியின் தலைவரானதும், தனது வாழ்நாள் தடை முடிவுக்கு வர வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, கங்குலி ஐசிசி தலைவரானதும், எனக்கு ஐசிசி எல்லா வகையிலும் உதவும் என நம்புகிறேன். கங்குலி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர். நுணுக்கங்கள் அறிந்தவர் அவர். அவரை விர ஐசிசி தலைவர் பதவிக்கு தகுதியானவர் வேறு யாரும் இல்லை. ஐசிசி-யின் தலைவராக கங்குலி, கிரிக்கெட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வார் என நம்புகிறேன். கங்குலி ஐசிசி-யின் தலைவராவதற்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு அவசியமே இல்லை  என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
 

click me!