டி20 அணிக்கு கோலி - ரோஹித் 2 பேருமே கேப்டன் இல்ல.. வேற கேப்டன்..!

By karthikeyan VFirst Published Jun 7, 2020, 2:13 PM IST
Highlights

ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்கான 2 வெவ்வேறு இந்திய அணிகளை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். 
 

கிரிக்கெட் வீரர்கள் ஆல்டைம் உலக லெவனை தேர்வு செய்வதுதான் வழக்கம். ஆனால் இப்போதெல்லாம், ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு போட்டிகளில் ஆடுவதற்கான அணிகளை தேர்வு செய்துவருகின்றனர். 

அஜித் அகார்கர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகிய இருவரும், ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்கான இந்திய அணிகளை தேர்வு செய்தனர். இந்நிலையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் இரண்டு வெவ்வேறு இந்திய அணிகளை தேர்வு செய்துள்ளார். 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில், ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் பொதுவாகவே டெஸ்ட் போட்டிக்கென்றே பிரத்யேகமாக புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, இஷாந்த் சர்மா, ரிதிமான் சஹா, அஷ்வின் ஆகிய வீரர்கள் இருக்கின்றனர். இவர்களுடன் உமேஷ் யாதவ், ஷமி ஆகியோரை டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, 12வது வீரராக குல்தீப் யாதவை தேர்வு செய்துள்ளார்.

டி20 அணியில், கேஎல் ராகுல், தவான் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாகவும் ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் சாஹலையும் ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, தீபக் சாஹர் ஆகியோரையும் 12வது வீரராக ஷர்துல் தாகூரையும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. 

டி20 அணிக்கான கேப்டனாக கேஎல் ராகுலை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஆகாஷ் சோப்ரா டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்த இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.

12வது வீரர் - குல்தீப் யாதவ்.

ஆகாஷ் சோப்ரா டி20 போட்டிக்கு தேர்வு செய்த இந்திய அணி;

கேஎல் ராகுல்(கேப்டன்), ஷிகர் தவான், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சாஹல், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், பும்ரா.

12வது வீரர் - ஷர்துல் தாகூர்.
 

click me!