IPL 2022 ஆர்சிபி இந்த 4 வீரர்களைத்தான் தக்கவைக்கணும்..! ஆர்சிபி முன்னாள் கேப்டன் அதிரடி

Published : Nov 27, 2021, 08:34 PM IST
IPL 2022 ஆர்சிபி இந்த 4 வீரர்களைத்தான் தக்கவைக்கணும்..! ஆர்சிபி முன்னாள் கேப்டன் அதிரடி

சுருக்கம்

ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி கருத்து கூறியுள்ளார்.  

ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்வதால் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக களமிறங்குகின்றன.

அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. எனவே ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டும். 2 புதிய அணிகளும், ஏலத்திற்கு முன்பாக தலா 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வரும் 30ம் தேதியே கடைசி நாள். எனவே ஒவ்வொரு அணியும் எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், டேவிட் வார்னர், ஷிகர் தவான், மயன்க் அகர்வால் ஆகிய வீரர்கள் அவர்கள் சார்ந்த அணிகளால் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஐபிஎல் ஏலம் பரபரப்பாக இருக்கும்.

இதற்கிடையே, எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளிவரும் நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் இதுகுறித்து கருத்து கூறிவருகின்றனர். 

அந்தவகையில், ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்பது குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி கருத்து கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய டேனியல் வெட்டோரி, விராட் கோலி, யுஸ்வேந்திர சாஹல், க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய 4 வீரர்களையும் தக்கவைக்கலாம் என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தன்னை கேட்டிருந்தால் யுஸ்வேந்திர சாஹலை தக்கவைப்பது குறித்து யோசித்திருப்பேன் என்றும், ஆனால் அண்மையில் அவர் பந்துவீசிய விதத்தை பார்க்கையில், அவரை கண்டிப்பாக தக்கவைக்க வேண்டும் என்றும் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!