லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
லக்னோ ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 45ஆவது போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். மழை குறுக்கீடு காரணமாக அரை மணி நேரம் தாமதமாக இந்தப் போட்டி தொடங்குகிறது. 3 மணிக்கு போடப்பட வேண்டிய டாஸ், தற்போது 3.30 மணிக்கு போடப்பட்டுள்ளது. இதையடுத்து 3.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக நடந்த பெங்களூருவிற்கு எதிரான போட்டியின் போதும் மழை குறுக்கீடு இருந்தது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
கைல் மேயர்ஸ், மனன் வோஹ்ரா, கரண் சர்மா, ஆயுஷ் பதோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), குர்ணல் பாண்டியா (கேப்டன்), கிருஷ்ணப்பா கௌதம், நவீன் உல் ஹாக், ரவி பிஷ்னாய், மோசின் கான்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருத்துராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர், கேப்டன்), தீபக் சகார், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா.
தந்தையின் நினைவாக புதிய பள்ளிக்கூடம்: 2300 குழந்தைகளுக்கு இலவச கல்வி
கேஎல் ராகுலிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக குர்ணல் பாண்டியாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில போட்டிகளைத் தவிர மற்ற போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிக்கே இந்த மைதானம் சாதமாக இருந்துள்ளது. ஆஃப் சைடு பவுண்டரி எலைன் மிகவும் பக்கமாகவும், லெக் சைடு கொஞ்சம் தூரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒற்றை காலால் உடற்பயிற்சி செய்யும் கேன் வில்லியம்சன் குணமடைய விராட் கோலி வாழ்த்து!
இதுவரையில் இரு அணிகளும் 9 போட்டிகளில் விளையாடி இரு அணிகளே 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப் பட்டியலில் லக்னோ 3ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ஆவது இடத்திலும் இடம் பிடித்துள்ளன. இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டியில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், இந்த லக்னோ மைதானத்தில் மட்டும் இரு அணிகளும் மோதியது கிடையாது. இன்று முதல் முறையாக பலப்பரீட்சை நடத்துகின்றன.
தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லக்னோ வீரர்; சிக்கலில் இந்தியா டெஸ்ட் டீம்!
இந்த லக்னோ ஏகானா மைதானத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி 4 போட்டிகளில் விளையாடியுள்ளது.
1. டெல்லிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் லக்னோ 193/6 எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி 143/9 எடுத்து 50 ரன்களில் தோல்வி அடைந்தது.
2. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி முதலில் ஆடி 121/8 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லக்னோ அணி 127/5 எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய லக்னோ 159/8 எடுத்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் 19.3 ஓவர்களில் 161/8 எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 135/6 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லக்னோ அணி 128/7 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. கடைசியாக நடந்த பெங்களூருக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு 126/9 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லக்னோ 108/10 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதே போன்று சென்னை அணியும், தனது சொந்த மைதானத்தில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடந்த மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலாக நடந்த போட்டியில் முதலில் ஆடிய சென்னை 217/5 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய லக்னோ அணி 205/7 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது. முதல் 2 போட்டிகளில் தனது ஹோம் மைதானத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி மற்ற 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
Hello from Lucknow 👋🏻
The Toss has been delayed in the clash ☁️
Stay tuned for further updates. pic.twitter.com/8OhWUCBSWi