IPL 2021 #SRHvsCSK சிஎஸ்கே அணியில் ஒரு அதிரடி மாற்றம்.. சீனியர் வீரரை மீண்டும் களமிறக்கிவிட்ட தோனி..!

Published : Sep 30, 2021, 07:23 PM IST
IPL 2021 #SRHvsCSK சிஎஸ்கே அணியில் ஒரு அதிரடி மாற்றம்.. சீனியர் வீரரை மீண்டும் களமிறக்கிவிட்ட தோனி..!

சுருக்கம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சிஎஸ்கேவும், கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணி ஏற்கனவே கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட அதேவேளையில், சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பே இல்லை. எனவே இந்த போட்டியின் முடிவு புள்ளி பட்டியலில் பெரிதாக எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன் நீக்கப்பட்டு, சீனியர் ஆல்ரவுண்டரும் சென்னை அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவருமான ட்வைன் பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ராயுடு, ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் அந்த அணி களமிறங்குகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), ப்ரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!