IPL 2021 MI - KKR அணிகளில் கண்டிப்பாக அந்த அணி தான் பிளே ஆஃபிற்கு முன்னேறும்..! முன்னாள் வீரர் அதிரடி

Published : Sep 30, 2021, 05:17 PM IST
IPL 2021  MI - KKR அணிகளில் கண்டிப்பாக அந்த அணி தான் பிளே ஆஃபிற்கு முன்னேறும்..! முன்னாள் வீரர் அதிரடி

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனின் பிளே ஆஃபிற்கு எந்தெந்த 4 அணிகள் முன்னேறும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. விறுவிறுப்பாக நடந்துவரும் ஐபிஎல் 14வது சீசனில் 2ம் பாகத்திலும் சிறப்பாக ஆடிவரும் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய 2 அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. அந்த 2 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. 

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். பிளே ஆஃபிற்கு 4வது அணியாக முன்னேற மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் ஆகிய 2 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு அணிகளுமே தலா 11 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று தலா 10 புள்ளிகளை பெற்றுள்ளன.

கேகேஆர் அணி 4ம் இடத்திலும், மும்பை அணி 5ம் இடத்திலும் உள்ள நிலையில், அந்த 2 அணிகளில் ஒன்றுதான் 4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறும்.

இந்நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறும் என்பது குறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுடன் ஆர்சிபி அணியும் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது உறுதி.

4வது அணியாக முன்னேற மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி பழைய அணியாக இல்லை. அமீரகத்தில் 3 போட்டிகளில் தோற்றது. பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றி மும்பை அணியின் பழைய ஆட்டத்தை போலவோ வெற்றியை போலவோ இல்லை. 

ஒயின் மோர்கன் தலைமையிலான கேகேஆர் அணி சிறப்பாக ஆடிவருகிறது. கேகேஆர் அணி அடுத்து ஆடப்போகும் 3 போட்டிகளும் அந்த அணிக்கு பின்னால் இருக்கும் அணிகளுடன் தான். எனவே கேகேஆர் அணி தான் 4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: சச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுவன்... இந்திய அணியில் வைபவ் அறிமுகம்!
IND vs ENG 2nd T20: இந்திய அணி பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்! சிக்சர் மன்னன் நீக்கம்! வைபவ் சூர்யவன்ஷி உள்ளே!