IPL 2021 #SRHvsCSK உப்புச்சப்பில்லாத போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Sep 30, 2021, 04:23 PM ISTUpdated : Sep 30, 2021, 04:24 PM IST
IPL 2021 #SRHvsCSK உப்புச்சப்பில்லாத போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. இந்த போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது. இந்த போட்டி புள்ளி பட்டியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லாத போட்டி. 

வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணி இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பே இல்லை. சிஎஸ்கே அணியோ கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டது. எனவே இந்த போட்டி உப்புச்சப்பில்லாத போட்டியாகவே இருக்கும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலுமே எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. இரு அணிகளுமே அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.
 

PREV
click me!

Recommended Stories

Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அட! தோற்றாலும் இத்தனை கோடிகள் கிடைக்குமா?
Kane Williamson: இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த 'கேன் மாமா'.. சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன கேன் வில்லியம்சன்!