7ஆவது வீரராக சாதிக்க காத்திருக்கும் எங்க தல தோனி; இன்னும் 22 ரன்கள் தான்!

By Rsiva kumar  |  First Published Mar 31, 2023, 2:15 PM IST

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 22 ரன்கள் அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் கடந்த 7ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
 


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருந்த 16ஆவது சீசனுக்காக கிரிக்கெட் திருவிழா இன்று பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அகமதாபாத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலீருந்து ரிச்சர்ட்சன் விலகிய நிலையில், மற்றொரு வீரரும் விலகியுள்ளார்.

IPL 2023: மும்பையை கதி கலங்கச் செய்த வேகப்பந்து வீச்சாளர் விலகல்: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு புதிய சிக்கல்!

Tap to resize

Latest Videos

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை தனது வேகத்தால் அலற வைத்த முகேஷ் சவுத்ரி முதுகுப் பதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஆகாஷ் சிங் அணியில் இடம் பெற்றுள்ளார். இப்படி பல சிக்கல்கள் அணியில் இருந்தாலும் பென் ஸ்டோக்ஸ், ரகானே ஆகியோர் அணிக்கு பக்க பலமாக வந்துள்ளனர்.

IPL 2023: GT vs CSK : பென் ஸ்டோக்ஸ் தான் ஓபனிங்கா? ரஹானே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

சிக்சர் விளாசுவதில் பெயர் போன தோனி, இதுவரையில் 229 சிக்சர்கள் அடித்துள்ளார். அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளார். இந்த சீசனில் 21 சிக்சர்கள் அடித்தால் அவர் 250 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைப்பார். இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் 240 சிக்சர்கள் அடித்து 3ஆவது இடத்தில் இருக்கிறார்.

போட்டோஷூட்டில் கலந்து கொள்ளாத ரோகித் சர்மா; ஏன், எதற்கு காரணத்தை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ்!

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் எம் எஸ் தோனி, இதுவரையில் 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  ஆனால், 206 இன்னிங்ஸில் மட்டும் விளையாடிய தோனி 4,978 ரன்கள் எடுத்துள்ளார். இன்றைய போட்டியிலோ அல்லது அடுத்த வரும் போட்டிகளிலோ தோனி 22 ரன்கள் சேர்த்தால், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் எடுத்த 7ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன்னதாக, 

விராட் கோலி - 223 போட்டிகள் - 6624 ரன்கள்
ஷிகர் தவான் - 206 போட்டிகள் - 6224 ரன்கள்
டேவிட் வார்னர் - 162 போட்டிகள் - 5881 ரன்கள்
ரோகித் சர்மா - 227 போட்டிகள் - 5879 ரன்கள்
சுரேஷ் ரெய்னா - 205 போட்டிகள் - 5528 ரன்கள்
ஏபி டிவிலியர்ஸ் - 184 போட்டிகள் - 5162 ரன்கள்

IPL 2023: இன்றைய போட்டி நடக்குமா? அகமதாபாத்தில் வெளுத்து வாங்கிய மழை; டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே!

click me!