IPL 2023: மும்பையை கதி கலங்கச் செய்த வேகப்பந்து வீச்சாளர் விலகல்: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு புதிய சிக்கல்!

By Rsiva kumar  |  First Published Mar 31, 2023, 1:16 PM IST

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
 


ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த கிரிக்கெட் திருவிழா இன்று மாலை 6 மணிக்கு ராஷ்மிகா மந்தனா, தமன்னா ஆகியோரது நடன நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதையடுத்து 16ஆவது சீசனுக்காக ஐஎபில் தொடரின் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

IPL 2023: GT vs CSK : பென் ஸ்டோக்ஸ் தான் ஓபனிங்கா? ரஹானே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Tap to resize

Latest Videos

கடந்த சீசனில் காயம் காரணமாக விலகிய தீபக் சஹாருக்குப் பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் சவுத்ரி பிளேயிங் 11னில் ஆட வைக்கப்பட்டார். தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட முகேஷ் சவுத்ரி 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இந்த சீசனில் அவரை ரூ.20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. அதோடு, அவருக்குப் பதிலாக ஆகாஷ் சிங் என்ற மாற்று வீரரையும் களமிறக்கியுள்ளது. கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முகேஷ் சவுத்ரி தனது ஆபார பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

போட்டோஷூட்டில் கலந்து கொள்ளாத ரோகித் சர்மா; ஏன், எதற்கு காரணத்தை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ்!

இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சிஎஸ்கே அணியில் பென் ஸ்டோக்ஸ், ரகானே ஆகியோர் இடம் பெற்றிருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தேச சிஎஸ்கே அணி:

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பாதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஆகாஷ் சிங், மஹீஷ் தீக்‌ஷனா.

IPL 2023: இன்றைய போட்டி நடக்குமா? அகமதாபாத்தில் வெளுத்து வாங்கிய மழை; டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே!

click me!