MS Dhoni Celebrate Friends Birthday Video: நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிய எம்.எஸ்.தோனி – வைரலாகும் வீடியோ!

By Rsiva kumar  |  First Published Dec 2, 2023, 3:50 PM IST

நண்பரது பிறந்தநாளை கொண்டாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நண்பரின் பிறந்தநாளை கொண்டாடும் வீடியோ சமூக வைரலாக பரவி வருகிறது. தோனியின் ரசிகரான சுபோத் சிங் குஷ்வாஹா, தனது பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடும் தோனியின் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "எம்.எஸ். தோனி சார் நண்பர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்" என்ற குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பரிய உடையில் வந்த தமிழருக்கு விராட் கோலியின் உணவகத்தில் அனுமதி மறுப்பு: வீடியோ வெளியிட்ட ராவண ராம்!

Latest Videos

இந்திய அணிக்கு டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி, தனது ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 5 முறை சாம்பியன் டைட்டில் வென்று கொடுத்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, முன்னாள் அணி வீரர்களுக்கு விருந்து கொடுப்பது முதல் நண்பர்கள், குடும்பத்தினருடன் நாடு முழுவதும் சுற்று பயணம் என்று ஓய்விற்கு பிறகான தனது பொன்னான நேரத்தை அனுபவித்து வருகிறார்.

கூச் பெஹர் டிராபியில் மகன் விளையாடுவதை தனது மனைவியுடன் சேர்ந்து நேரில் கண்டு ரசித்த ராகுல் டிராவிட்!

அதே நேரத்தில், தோனி, பயணங்களின் போது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடமிருந்து அன்பை பரிமாறி வருகிறார். அப்படி ஒரு நண்பரின் பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வரும் 19ஆம் தேதி ஐபிஎல் ஏலம் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோனியை தக்க வைத்துக் கொண்டதாக அறிவித்தது.

தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டரான வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிக்கு எதிரான கடைசி பந்தில் விறுவிறுப்பான வெற்றியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து, ஐபிஎல் தொடருக்கு பிறகு 42 வயதான தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டார். 2024 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி ரூ.31.4 கோடியை பர்ஸ் தொகையாக வைத்துள்ளது.

BAN vs NZ Test: முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் சாதனை!

 

 

click me!