ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் முஷ்தாபிஜூர் ரஹ்மான் தனது முதல் ஓவரிலேயே பாப் டூப்ளெசிஸ் மற்றும் ரஜத் படிதார் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விராட் கோலி பேட்டிங், செய்ய சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர் பந்து வீசினார். முதல் பந்தை வைடாக வீசினார். 2 ஆவது பந்தில் விராட் கோலி ஒரு ரன் எடுத்து கொடுத்தார். 5ஆவது பந்தில் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பவுண்டரி விளாசினார். இந்த சீசனில் முதல் பவுண்டரி இதுவாகும்.
3 WICKETS IN NO TIME BY CSK.
- WHAT A COMEBACK. 🦁pic.twitter.com/frYC4qzTFt
போட்டியின் 2ஆவது ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரில் பாப் டூப்ளெசிஸ் 2 பவுண்டரி விளாசினார். அடுத்து வந்த தீபக் சாஹர் ஓவரில் டூப்ளெசிஸ் 4 பவுண்டரி வீசினார். ஆர்சிபி அணியானது 4 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தான 5ஆவது ஓவரை வீசுவதற்கு முஷ்தாபிஜூர் ரஹ்மான் வரவழைக்கப்பட்டார். இந்த ஓவரில், 2ஆவது பந்தில் பாப் டூப்ளெசிஸ் பவுண்டரி அடித்த நிலையில் 3ஆவது பந்தில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து ப்ளெசிஸ் ஆட்டமிழந்தார்.
அவர், 23 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ரஜத் படிதார் 3 பந்துகள் பிடித்த நிலையில் அதே ஓவரில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்த நிலையில் நடக்க கூட முடியாமல் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வந்து ஒரே ஓவரில் சிஎஸ்கே அணிக்காக 2 விக்கெட்டுகள் எடுத்து கொடுத்துள்ளார்.
போட்டியின் பவர்பிளேயின் கடைசி ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் 3ஆவது பந்திலேயே கோல்டன் டக் முறையில் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ஆர்சிபி முதல் பவர்பிளே ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 42 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. ஆனால், அதற்கு முன்னதாக 3 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.