CSK vs RCB, IPL 2024: டாஸ் தோல்வியோடு ஐபிஎல் 2024 தொடரை தொடங்கிய சிஎஸ்கே நியூ கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

By Rsiva kumarFirst Published Mar 22, 2024, 8:26 PM IST
Highlights

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸில் தோற்று இந்த ஐபிஎல் சீசனை தொடங்கியுள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான 17ஆவது ஐபிஎல் சீசன் பிரம்மாண்டமாக இன்று தொடங்கியுள்ளது. இதில், அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப், சோனு நிகம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரது கலை நிகழ்ச்சிகளுடன் இந்த சீசன் பிரம்மாண்டமாக தொடங்கியது. இதைத் தொடர்ந்து நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக அவதாரம் எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் டாஸில் தோற்று இந்த சீசனை தொடங்கியுள்ளார். சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்த வரையில் முதலில் பேட்டிங் செய்யும் அணி தான் 60 சதவிகித போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 76 ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 46 முறை வெற்றி பெற்றுள்ளது.

சிஎஸ்கே – ஆர்சிபி நேருக்கு நேர்:

இதுவரையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய 31 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 முறை வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் சிஎஸ்கே அணியானது 4-1 என்று கைப்பற்றியிருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்:

இதுவரையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

பாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), கரண் சரமா, அல்ஜாரி ஜோசஃப், முகமது சிராஜ், மாயங்க தாகர்.

இம்பேக்ட் பிளேயர்: யாஷ் தயாள்

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜின்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மஹீஷ் தீக்‌ஷனா, முஷ்தாபிஜூர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே.

இம்பேக்ட் பிளேயர்: ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, மொயீன் அலி.

click me!