இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு அறிவிப்பு..!

By karthikeyan VFirst Published Jan 7, 2023, 6:11 PM IST
Highlights

இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. சேத்தன் ஷர்மாவே மீண்டும் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

இந்திய அணி ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய ஐசிசி தொடர்களில் தோல்வியை தழுவியது. 2021ம் ஆண்டு டி20 உலக கோப்பையிலும் தோற்றது. இந்த 3 பெரிய தொடர்களிலுமே இந்திய அணி தேர்வு கடும் விமர்சனத்துக்குள்ளானது.

2022ல் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என தொடர்ந்து 2 பெரிய தொடர்களில் தோற்றதன் விளைவாக, தேர்வுக்குழுவின் செயல்பாட்டின் மீது அதிருப்தியடைந்த பிசிசிஐ தேர்வுக்குழுவை கலைத்தது. புதிய தேர்வாளர்களுக்கான விண்ணபங்கள் பெறப்பட்டன.

இதுதான் ஒருநாள் உலக கோப்பைக்கான எனது இந்திய அணி.. அவங்க 2 பேருக்கும் கண்டிப்பா இடம் இல்ல..! ஸ்ரீகாந்த் அதிரடி

வெங்கடேஷ் பிரசாத், ஹேமங் பதானி உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். வெங்கடேஷ் பிரசாத் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால் மீண்டும் சேத்தன் ஷர்மாவுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயல்பட்ட சேத்தன் ஷர்மா மீண்டும் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியில் நோ பால் வீசி பழக்கப்பட்டதுதான் காரணம்..! அர்ஷ்தீப் சிங், பவுலிங் கோச்சை விளாசிய கம்பீர்

ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரத்தோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகிய நால்வரும் தேர்வாளர்களாக நியமிக்க்கப்பட்டுள்ளனர். சேத்தன் ஷர்மா தலைமையிலான 5 பேர் அடங்கிய இந்த தேர்வுக்குழுவை இன்று நியமித்தது பிசிசிஐ.

click me!