BBL: சாம் ஹார்ப்பர் அபாரமான பேட்டிங்.. ஹோபர்ட் ஹரிகேன்ஸை ஈசியா வீழ்த்தி மெல்பர்ன் ரெனெகேட்ஸ் வெற்றி

By karthikeyan VFirst Published Jan 7, 2023, 4:46 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் சாம் ஹார்ப்பரின் அபாரமான பேட்டிங்கால் ஹோபர்ட் ஹரிகேன்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மெல்பர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மெல்பர்னில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி:

மார்கஸ் ஹாரிஸ், மார்டின் கப்டில், சாம் ஹார்ப்பர் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஜோனாதன் வெல்ஸ், ஹார்வி, வில் சதர்லேண்ட், அகீல் ஹுசைன், டாம் ரோஜர்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், முஜீபுர் ரஹ்மான். 

இதுதான் ஒருநாள் உலக கோப்பைக்கான எனது இந்திய அணி.. அவங்க 2 பேருக்கும் கண்டிப்பா இடம் இல்ல..! ஸ்ரீகாந்த் அதிரடி

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி:

காலெப் ஜுவெல், பென் மெக்டெர்மோட், ஜாக் க்ராவ்லி, மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ஆசிஃப் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், வில் பார்க்கர், ஜோயல் பாரிஸ், நேதன் எல்லிஸ், ரைலீ மெரிடித்.

முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜுவெல் மற்றும் மெக்டெர்மோட் ஆகிய இருவரும் தலா 28 ரன்கள் அடித்தனர். பின்வரிசையில் ஃபஹீம் அஷ்ரஃப் 17 பந்தில் 26 ரன்களும், ஜோயல் பாரிஸ் 8 பந்தில் 16 ரன்களும் அடிக்க, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப, ஹோபர்ட் அணி 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது.

பயிற்சியில் நோ பால் வீசி பழக்கப்பட்டதுதான் காரணம்..! அர்ஷ்தீப் சிங், பவுலிங் கோச்சை விளாசிய கம்பீர்

163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியின் சீனியர் தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடியாக பேட்டிங் ஆடி 19 பந்தில் 36 ரன்களை விளாசினார். மார்கஸ் ஹாரிஸ்(3) மற்றும் ஆரோன் ஃபின்ச்(5) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய சாம் ஹார்ப்பர் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 48 பந்தில் 89 ரன்களை குவித்து மெல்பர்ன் ரெனெகேட்ஸை வெற்றி பெற செய்தார். 19வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி.
 

click me!