MS Dhoni Wait for Batting: மாணவர்களை பரீட்சைக்கு அனுப்பிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்த ஆசிரியர் தோனி!

By Rsiva kumarFirst Published Mar 26, 2024, 10:46 PM IST
Highlights

சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பரான தோனி எப்போது பேட்டிங் செய்ய வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், அவர் இளம் வீரர்களை பரீட்சைக்கு அனுப்பிவிட்டு ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ணியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 7ஆவது போட்டி சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் களமிறங்கினர்.

சேப்பாக்கத்தில் உருவான துபே புயலால் சிஎஸ்கே கொட்டிய சிக்ஸர், பவுண்டரி மழை – ஜிடிக்கு 207 ரன்கள் இலக்கு!

இதில், அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா ஒரு பவுலரையும் விட்டு வைக்கலாம் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அஜின்க்யா ரஹானே 12 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து தன் பங்கிற்கு 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

Dhoni & Rachin in the Dressing room, having a bat swing. pic.twitter.com/GpNshmiTph

— Johns. (@CricCrazyJohns)

 

இவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த ஷிவம் துபே சிகரும், பவுண்டரியுமாக விளாசி ரன்கள் குவித்தார். இதன் மூலமாக சிஎஸ்கேயின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 22 பந்துகளில் 51 ரன்கள் கடந்தார். ஆனால், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். ஆனால், எப்போது அவர் ஆட்டமிழப்பார் என்பது போன்று தோனி டிரெஸிங் ரூமில் ஹெம்ட் மாட்டி காத்துக் கொண்டிருந்தார். அதோடு பேட்டிங் பயிற்சியும் செய்து கொண்டிருந்தார்.

ரூ.1.80 கோடிக்கு ஒர்த்தா? சேப்பாக்கத்தில் 6, 4, 4, 4, 6, 4, 6, 4, 4 நிரூபித்து காட்டிய ரச்சின் ரவீந்திரா!

ஆனால், அதன் பிறகு சமீர் ரிஸ்வி களமிறக்கப்பட்டார். ரஷீத் கான் ஓவரில் 2 சிக்ஸர் அடிப்பதை பார்த்து தோனி ரசித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலானது. கடைசியில் அவர் ஆட்டமிழக்கவும் தோனி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார்.\

 

 

இளம் வீரர்களான தனது மாணவர்களை பேட்டிங் செய்ய தயார்படுத்திய நிலையில் அவர்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்று அவர்களது ரிசல்ட்டுக்காக தோனி காத்திருந்தது போன்று அவர் நின்று வேடிக்கை பார்த்த ஒரு புகைப்படம் உணர்த்துகிறது. இந்தப் போட்டியில் தோனி களமிறங்காத நிலையில் அடுத்த போட்டியில் தோனி பேட்டிங் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக தோனி பவுலிங் பயிற்சி செய்த புகைப்படம் வைரலானது.

லட்டு மாதிரி ருதுராஜ் கெய்க்வாட் கையிலயே கொடுத்த கேட்ச் – கோட்டைவிட்ட தமிழக வீரர் சாய் கிஷோர்!

 

 

click me!