ரூ.1.80 கோடிக்கு ஒர்த்தா? சேப்பாக்கத்தில் 6, 4, 4, 4, 6, 4, 6, 4, 4 நிரூபித்து காட்டிய ரச்சின் ரவீந்திரா!

By Rsiva kumar  |  First Published Mar 26, 2024, 8:29 PM IST

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் 7ஆவது போட்டியில் சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.


எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஜிடி இடையிலான ஐபிஎல் 7ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிடி கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கெய்க்வாட் பேட்டிங் செய்ய அஸ்மதுல்லா உமர்சாய் பவுலிங் செய்தார்.

லட்டு மாதிரி ருதுராஜ் கெய்க்வாட் கையிலயே கொடுத்த கேட்ச் – கோட்டைவிட்ட தமிழக வீரர் சாய் கிஷோர்!

Tap to resize

Latest Videos

முதல் பந்தில் ரன் இல்லாத போது, 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். அதன் பிறகு மீண்டும் ஸ்டிரைக்கிற்கு வந்த கெய்க்வாட் 6ஆவது பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்றிருந்த தமிழக வீர சாய் கிஷோர் கோட்டைவிட்டார். கேட்ச் விடும் போது கெய்க்வாட் 5 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். இதுவரையில் கெய்க்வாட் பெரிதாக அடிக்காத போது இனிமேல் அவர் எப்படி அடிப்பார் என்பது பொறுத்து இந்த போட்டி மாறும்.

ரசிகர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும்!

சிஎஸ்கே அணியில் ரூ.1.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா தான் அதற்கு ஒர்த்தானவர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா, உமேஷ் யாதவ்வின் ஓவரில் 6, 4 என்று 10 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி பறக்கவிட்டார். மீண்டும் உமேஷ் யாதவ் ஓவரில் 6, 4 என்று பறக்கவிட்டார். இதே போன்று உமர்சாய் ஓவரில் 6, 4 அடித்தார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் அறிவிப்பு, டே நைட் மேட்ச் உண்டு!

இதைத் தொடர்ந்து ரஷீத் கான் ஓவரில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த நிலையில் 2ஆவது பந்தில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இறுதியாக ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 37 ரன்கள் எடுத்தார்.

click me!