லட்டு மாதிரி ருதுராஜ் கெய்க்வாட் கையிலயே கொடுத்த கேட்ச் – கோட்டைவிட்ட தமிழக வீரர் சாய் கிஷோர்!

By Rsiva kumarFirst Published Mar 26, 2024, 8:04 PM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 7ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கொடுத்த அழகான கேட்ச் வாய்ப்பை தமிழக வீரர் சாய் கிஷோர் கோட்டைவிட்டுள்ளார்.

சிஎஸ்கே மற்றும் ஜிடி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 7ஆவது போட்டி எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிடி கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கெய்க்வாட் பேட்டிங் செய்ய அஸ்மதுல்லா உமர்சாய் பவுலிங் செய்தார்.

முதல் பந்தில் ரன் இல்லாத போது, 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். அதன் பிறகு மீண்டும் ஸ்டிரைக்கிற்கு வந்த கெய்க்வாட் 6ஆவது பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்றிருந்த தமிழக வீர சாய் கிஷோர் கோட்டைவிட்டார். கேட்ச் விடும் போது கெய்க்வாட் 5 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். இதுவரையில் கெய்க்வாட் பெரிதாக அடிக்காத போது இனிமேல் அவர் எப்படி அடிப்பார் என்பது பொறுத்து இந்த போட்டி மாறும்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 இன்னிங்ஸ் விளையாடி 304 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தின் சிஎஸ்கே அடித்த அதிகபட்ச ஸ்கோர் 246/5 vs ராஜஸ்தான் ராயல்ஸ் (2010). குறைந்தபட்ச ஸ்கோர் 109 vs மும்பை இந்தியன்ஸ் (2019).

ஏற்கனவே நேற்று நடந்த பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது முதல் ஓவரிலேயே கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜானி பேர்ஸ்டோவ் கோட்டைவிட்டார். அப்போது கோலி ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் அதன் பிறகு அதிரடியாக விளையாடிய கோலி 77 ரன்கள் எடுத்தார்.

click me!