இன்ஸ்டாவில் பயோவை மாற்றிய கிரிக்கெட்டர்; டிரெண்டடிக்கும் சானியா மிர்சா – சோயிப் மாலிக் விவாகரத்து நியூஸ்!

By Rsiva kumar  |  First Published Aug 4, 2023, 1:37 PM IST

சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்த நிலையில், தற்போது இருவருக்கும் இடையில் விவாகரத்து ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.


இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இது நாங்க தோற்க வேண்டிய போட்டி – ரோவ்மன் பவல்!

Tap to resize

Latest Videos

இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் இருவரும் விவாகரத்து கோர இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு சோயிப் மாலிக் மறுப்பு தெரிவித்திருந்தார். பிறகு இருவரும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சா குறித்த தகவல்களை நீக்கியுள்ளார். அதாவது மிகச்சிறந்த பெண்மணியான சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கியுள்ளார்.

NCC Cadets: என்சிசி வீரர்களை தாக்கிய மாணவர் இடைநீக்கம்; வீடியோ வைரலான நிலையில் கல்லூரி நடவடிக்கை!

இதன் காரணமாக, தற்போது மீண்டும் சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.

click me!