வரலாற்றில் சிறப்பான கேட்ச்: பறந்து பிடித்த இங்கிலாந்து வீரர் பிராட்லி ஹர்ரி: குவியும் பாராட்டுக்கள்!

By Rsiva kumar  |  First Published Jun 17, 2023, 3:57 PM IST

டி20 பிளாஸ்ட் தொடரின் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் பிராட்லி ஹர்ரி பிடித்த கேட்ச் வரலாற்றின் சிறப்பான கேட்சாக கருதப்படுகிறது.


ஐபிஎல் போன்று தற்போது மேஜர் லீக், தமிழ்நாடு பிரீமியர் லீக், மகாராஷ்டிரா பிரீமியர் லீக், லங்கா ப்ரீமியர் லீக் என்று போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளிலும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான டி20 பிளாஸ்ட் தொடரின் 2023 சீசனில் நேற்றைய போட்டியில் சசக்ஸ் ஷார்க்ஸ் மற்றும் ஹேம்ப்ஷைர் ஹாக்ஸ் அணிகள் மோதின.

ஒரு போதும் ஒரு பந்து வீச்சாளராக மாறவே கூடாது – ரவிச்சந்திரன் அஸ்வின் ஃபீல் அன்ஹேப்பி!

Tap to resize

Latest Videos

இதில் டாஸ் வென்ற ஹேம்ப்ஷைர் முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் ஆடிய சசக்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஆலிவர் கார்ட்டர் 6 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 64 ரன்கள் குவித்தார். ரவி போபாரா 30 ரன்களும், மைக்கேல் பர்கஸ் 26 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 184 ரன்களாஇ கடின இலக்காக கொண்டு ஹேம்ப்ஷர் அணி ஆடியது. இதில், பென் மெக்டெர்மோட் 2 ரன்னிலும், ஜேம்ஸ் வினஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டாபி ஆல்பர்ட் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினர்.

112 அடிச்சு கொடுத்த அஜிதேஷ் குருசுவாமி: வின்னிங் ஷாட் கொடுத்த பொய்யாமொழி: த்ரில் வெற்றி பெற்ற நெல்லை!

ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்து தடுமாறியது. அடுத்து வந்த ஜோ வேதர்லி 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் அணியின் வெற்றிக்கு போராடிய நிலையில் லியான் டாசன் அரைசதம் அடித்து 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். பென்னி ஹோவல் தனது பங்கிற்கு 4 பவுண்டரி அடித்து 25 ரன்கள் எடுத்து ஆடினார். சசக்ஸ் அணியின் வீரர் டைமல் மில்ஸ் வீசிய 14 ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் பென்னி ஹோவல் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார்.

ஆனால், டீப் ஸ்கொயர் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் பிராட்லி கர்ரி வேகமாக ஓடி வந்து பறந்து சென்று ஒரு கையால் தாவி பிடித்தார். பவுண்டரி எல்லைக்கு அருகில் பிடித்த நிலையில் அங்கும், இங்கும் அசையாமல் தாவி பிடித்து லியான் டாசனை ஆட்டமிழக்க செய்துள்ளார்.

இதையடுத்து அபாரமாக கேட்ச் பிடித்த பிராட்லி ஹர்ரிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போன்று இது வரலாற்றின் மிகச்சிறந்த கேட்சுகளில் ஒன்று தனது டுவிட்டரில் தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார். இறுதியாக இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து ஹேம்ப்ஷர் அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சாதனை மன்னர்கள்!

 

Has to be one of the greatest catches ever

The distance he covers before diving ..phewwwww 🤯🤯 https://t.co/IhOn5ecRzx

— DK (@DineshKarthik)

 

click me!