அவரு லெவலே வேற.. அவரோட இவரை ஒப்பிடவே கூடாதுங்க..! இந்திய வீரர்கள் குறித்து ஆஸி., முன்னாள் வீரர் தடாலடி

By karthikeyan VFirst Published Jun 3, 2020, 2:39 PM IST
Highlights

விராட் கோலி - ரோஹித் ச்ரமா ஆகிய இருவரில், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில்(ஒருநாள் மற்றும் டி20) யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். 
 

ரோஹித் சர்மா - விராட் கோலி ஆகிய இருவரும் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். விராட் கோலி மூன்றுவிதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். விராட் கோலியின் கெரியர் முடிவதற்குள் பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவிற்கு விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி ரன்களை குவித்துவருகிறார். 

ரோஹித் சர்மா இப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க தொடங்கியுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா தலைசிறந்த வீரர். அசாத்தியமான சாதனைகளை தன்னகத்தே கொண்டவர். ஒருநாள் கிரிக்கெட்டில் 264 என்ற அசாத்திய அதிகபட்ச ஸ்கோருடன் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார். ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின்னர் நடப்பதே வேறு என்பதும், அன்றைய தினம் ரோஹித் சர்மாவுக்கானது என்பதும், பெரிய இன்னிங்ஸை ஆடி பெரிய ஸ்கோரை அடிப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

சர்வதேச அளவில் விராட் கோலிதான் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்பட்டாலும், அவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல ரோஹித் சர்மா. விராட் கோலி ஆடுவது மாதிரியான இன்னிங்ஸை ரோஹித் ஆடியிருக்கிறார். ஆனால் ரோஹித் மாதிரியான அசாத்திய இன்னிங்ஸை கண்டிப்பாக கோலியால் ஆடமுடியாது. ஒருவரை ஒருவர் மட்டம்தட்ட முடியாது.  இந்திய அணியில் இருவரது ரோலும் வெவ்வேறு என்பதால், அதற்கேற்ப இருவரும் ஆடிவருகின்றனர். இருவரையும் ஒப்பிடுவதை விட இருவருமே தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதுதான் நிதர்சனம்.

கம்பீர் உள்ளிட்ட சிலர், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விராட் கோலியை விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியிருக்கின்றனர். அதேபோல, முகமது கைஃபும் ஒரு நேர்காணலில், ரோஹித்தும் கோலியும் ஒரே நேரத்தில் வெவ்வேறு போட்டிகளில் ஆடினால், நான் ரோஹித் ஆடுவதை பார்க்கத்தான் போவேன் என்று கைஃப் கூறியிருக்கிறார். 

இந்நிலையில், யூடியூப் நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக், விராட் கோலி தான் பெஸ்ட் பேட்ஸ்மேன். சில போட்டிகளில் நன்றாக ஆடுவது, சில போட்டிகளில் சொதப்புவது என்றில்லாமல், தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகிறார் கோலி. இந்திய அணி இலக்கை விரட்டும் சமயங்களில், கடைசிவரை கடுமையாக போராடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கிறார் கோலி. ஆனால் இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதால், இருவரையும் ஒப்பிட முடியாது.

ஏனெனில் இருவரது ரோலும் வெவ்வேறு. பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பது ரோஹித்தின் ரோல். விராட் கோலியின் ரோல் என்பது, முழு இன்னிங்ஸையும் ஆடி கடைசி வரை களத்தில் நின்று ஆடுவது என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
 

click me!