வேண்டுமென்றே சச்சினுக்கு பவுன்ஸரா போட்டு டார்ச்சர் செய்தது ஏன்..? 14 ஆண்டுக்கு பின் அக்தர் பகிர்ந்த சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Jun 1, 2020, 11:37 PM IST
Highlights

சச்சின் டெண்டுல்கரை பவுன்ஸர்களாக வீசி மிரட்டிய சம்பவத்தை அக்தர் பகிர்ந்துள்ளார். 
 

சச்சின் டெண்டுல்கர் - ஷோயப் அக்தர், கிரிக்கெட்டின் மிகப்பிரபலமான போட்டியாளர்கள். அக்தரின் பவுலிங்கை சச்சின் டெண்டுல்கர் எதிர்கொள்வதை பார்ப்பதைவிட, ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷம் வேறு எதுவும் இருக்காது. 

சச்சின் டெண்டுல்கர் ஆல்டைம் கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள், அதிக ரன்கள் உள்ளிட்ட பல்வேறு பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரர். 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடிய சச்சின் டெண்டுல்கர், தனது கெரியரில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், க்ளென் மெக்ராத், ஆலன் டொனால்டு, முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், பிரெட் லீ, சமிந்தா வாஸ், ஷோயப் அக்தர், டேல் ஸ்டெய்ன் என பல சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர். 

சச்சின் பல ஜாம்பவான் பவுலர்களை எதிர்கொண்டு ஆடியிருந்தாலும், அக்தரின் பவுலிங்கை ஆடுவது மிகவும் ஸ்பெஷல். 2003 உலக கோப்பையில் அக்தரின் பவுலிங்கை மைதானம் முழுவதும் பறக்கவிட்ட சச்சின், 98 ரன்களில் அவரது பவுலிங்கிலேயே அவுட்டும் ஆனார். தனது பவுலிங்கை தாறுமாறாக அடித்து நொறுக்கிய சச்சினை சதம் அடிக்கவிடாமல், 98 ரன்களில் வீழ்த்தினார் அக்தர். அதுதான் சச்சின் - அக்தர் இடையேயான போட்டி. இருவரும் களத்தில் தங்களது ஆட்டத்தின் மூலம் பரஸ்பரம் பதிலடி கொடுத்து கொள்வார்கள். ஆனால் அது தனிப்பட்ட மோதலாக இருந்ததில்லை.

ஆனால் ரசிகர்களின் பார்வையில் அவர்கள் எதிரிகளாக தெரிந்திருக்கக்கூடும். உண்மையில் அப்படியெல்லாம் இல்லை என்று அக்தர் தெரிவித்துள்ளார். சஞ்சய் மஞ்சரேக்கருடனான உரையாடலில் சச்சின் குறித்து பேசிய அக்தர், வெளியிலிருந்து பார்ப்பவர்கள், என்னையும் சச்சினையும் கடும் எதிரிகளாகத்தான் பார்த்திருப்பார்கள். ஆனால் நாங்கள் வார்த்தை போரிலோ மோதலிலோ ஈடுபட்டதேயில்லை. ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற வகையில், சச்சின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். அவரை அவுட்டாக்க கடுமையாக உழைத்திருக்கிறேன். 

சச்சினுக்கு எங்கு காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக்கூட தெரிந்துகொள்வேன். அப்படித்தான், 2006ல் ஃபைசலாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவரை வீழ்த்தினேன். அந்த போட்டியில் ஆடும்போது, சச்சினுக்கு முழங்கை காயம் ஏற்பட்டிருந்தது. அது எனக்கு தெரியும். எனவே அவரால் ஹூக் ஷாட்டோ, புல் ஷாட்டோ ஆடமுடியாது என்பதால், தொடர்ச்சியாக பவுன்ஸர்களை வீசினேன் என்று அக்தர் தெரிவித்துள்ளார். 

அந்த குறிப்பிட்ட டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அதில் சச்சின் டெண்டுல்கர் முதல் இன்னிங்ஸில் மட்டும்தான் பேட்டிங் ஆடினார். அந்த இன்னிங்ஸில் அக்தரின் பவுலிங்கில் தான் ஆட்டமிழந்தார். வெறும் 14 ரன்களில் அக்தரின் பவுலிங்கில் விக்கெட் கீப்பர் காம்ரான் அக்மலிடம் கேட்ச் கொடுத்து சச்சின் ஆட்டமிழந்தார். 
 

click me!