2019ன் பெஸ்ட் டெஸ்ட் லெவன்.. கோலியையே தூக்கியடித்த பாபர் அசாம்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்

By karthikeyan VFirst Published May 23, 2020, 2:33 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக், 2019ன் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

2019 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆண்டாகும். வரலாற்றில் இடம்பிடித்த ஒருநாள் உலக கோப்பை ஃபைனல், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடக்கம் என 2019 கிரிக்கெட்டின் அசத்தலாக ஆண்டாக அமைந்தது. 

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்தது, ஆஸ்திரேலியாவிற்கு லபுஷேன் என்ற அருமையான வீரர் கிடைத்தது என்ற வகையிலும் 2019 சிறந்த ஆண்டாக அமைந்தது. 

இந்நிலையில், 2019ன் சிறந்த டெஸ்ட் லெவனை பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார். கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் தொடக்க வீரர்களாக இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வாலை தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசைக்கு ஆஸ்திரேலியாவின் லபுஷேன், நான்காம் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை தேர்வு செய்துள்ள  பிராட் ஹாக், ஐந்தாம் வரிசை வீரராக பாகிஸ்தானின் பாபர் அசாமை தேர்வு செய்துள்ளார்.

பாபர் அசாம் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படும் விராட் கோலி, வில்லியம்சன், ஸ்மித், ஜோ ரூட் ஆகியோரின் வரிசையில் பாபர் அசாமும் பார்க்கப்படுகிறார். விராட் கோலியுடன் சிலர் பாபர் அசாமை ஒப்பிடுகின்றனர். அந்தளவிற்கு சிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம். 

பிராட் ஹாக்கின் இந்த அணியில் விராட் கோலிக்கு இடமளிக்கவில்லை. விராட் கோலியை சேர்க்காமல், பாபர் அசாமை சேர்த்ததற்கான காரணத்தை ஹாக் தெரிவித்துள்ளார். பாபர் அசாம் அருமையான பேட்ஸ்மேன். பொதுவாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் வெளிநாட்டு வீரர்கள் சரியாக ஆடமாட்டார்கள். பிரிஸ்பேன் பிட்ச்சில் ஆட வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். அது பேட்டிங்கிற்கு சவாலான பிட்ச். ஆனால் கடந்த ஆண்டு பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது பிரிஸ்பேனில் அருமையாக ஆடி பாபர் அசாம் சதமடித்தார். அவரது திறமையை பறைசாற்றும் சதம் அது. அதனால் தான் பாபர் அசாமை தேர்வு செய்ததாக பிராட் ஹாக் தெரிவித்தார். 

அதேநேரத்தில் விராட் கோலி, கடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. அதனால் தான் அவரை 2019ன் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யவில்லை என தெரிவித்தார்.

பாபர் அசாமுக்கு அடுத்து, ஆறாம் வரிசையில் ரஹானேவையும் விக்கெட் கீப்பராக குயிண்டன் டி காக்கையும் தேர்வு செய்த ஹாக், டி காக்கைத்தான் இந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்தார். ஃபாஸ்ட் பவுலர்களாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், இந்தியாவின் முகமது ஷமி, நியூசிலாந்தின் நீல் வாக்னர் ஆகிய மூவரையும் ஸ்பின்னராக நேதன் லயனையும் ஹாக் தேர்வு செய்துள்ளார்.

பிராட் ஹாக் தேர்வு செய்த டெஸ்ட் லெவன்:

மயன்க் அகர்வால், ரோஹித் சர்மா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், பாபர் அசாம், ரஹானே, குயிண்டன் டி காக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், முகமது ஷமி, நீல் வாக்னர், நேதன் லயன்.
 

click me!