சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாம உருப்படுற வழிய பாரு தம்பி.. பாபர் அசாம் மீது செம கடுப்பாகி திட்டிய அக்தர்

By karthikeyan VFirst Published May 22, 2020, 6:55 PM IST
Highlights

பாபர் அசாம், தான் ஆங்கில மொழியில் பேசும் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியதை, கடுமையாக விளாசியுள்ளார் ஷோயப் அக்தர்.
 

சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக திகழும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் வரிசையில் பாபர் அசாமும் சிறந்த பேட்ஸ்மேனாக மதிக்கப்படுகிறார். 

இளம் வீரரான பாபர் அசாமை, விராட் கோலியுடன் ஒப்பிடுவது மட்டுமல்லாமல், விராட் கோலியை விடவே பாபர் அசாம் சிறந்த வீரர் என்றெல்லாம் பல முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். ஆனால் 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி சதங்களையும் சாதனைகளையும் குவிப்பதுடன், அணிக்கும் வெற்றியை தேடிக்கொடுத்துவரும் விராட் கோலியுடன் எல்லாம் பாபர் அசாமை ஒப்பிட முடியாது. இதே கருத்தைத்தான் பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் யூனிஸ் கானும் தெரிவித்தார். விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவது சரியல்ல என்று அவர் தெரிவித்தார்.

பாபர் அசாம் தனது திறமையான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக உயர்ந்துவிட்டார். கேப்டனான பாபர் அசாம், ஆங்கில மொழியில் தன்னால் சரளமாக பேச முடியாது என்றும், எனவே ஆங்கில மொழியில் பேசும் திறனை மேம்படுத்தி கொள்வதன் மூலம் தன்னால் சிறந்த கேப்டனாக களத்திலும், களத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதும் திகழ முடியும் என்றும் தெரிவித்திருந்தார். 

பாபர் அசாமின் இந்த ஸ்டேட்மெண்ட்டை கேட்டு அக்தர் செம கடுப்பாகிவிட்டார். அணியை மேம்படுத்தும் திட்டம், அணியை வழிநடத்தும் திறன் ஆகியவற்றை எல்லாம் விட்டுவிட்டு, ஆங்கில மொழி திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் அணியை மேம்படுத்துவதற்கான திட்டத்தை பற்றி பேசாமல், கம்யூனிகேஷன் திறனை வளர்த்துக்கொள்வது ஒன்று மட்டுமே முக்கியமானது போல, அதைப்பற்றி பேசி பாபர் அசாம் மடை மாற்றம் செய்வதாக கருதிய அக்தர், பாபர் அசாமை கடுமையாக விளாசியுள்ளார்.

பாபர் அசாமின் கருத்து குறித்து பேசிய அக்தர், பாபர் அசாம் இம்ரான் கானை போன்ற சிறந்த கேப்டனாக நினைக்கலாம். ஆனால் நன்றாக பேட்டிங் ஆடுவது மட்டுமே அதற்கான தகுதியில்லை. கிரிக்கெட்டிற்கு அப்பாற்பட்டு ஒரு மனிதனாகவும் இம்ரான் கானை போல சிறந்து விளங்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக எங்களுக்கு தெரிந்த விஷயத்தை(ஆங்கிலத்தில் பேசுதல்) பற்றியே திரும்ப திரும்ப பேச வேண்டாம். இதுகுறித்து விவாதத்திற்கே நாங்கள் வர விரும்பவில்லை. பாபர் அசாம் அவரது கம்யூனிகேஷன் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் தான். ஆனால் அதேவேளையில், ஆளுமை, திறமை, தலைமைத்துவ பண்பு, ஃபிட்னெஸ் ஆகியவற்றிலும் மேம்பட வேண்டும் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
 

click me!