எங்க காலத்துல யோ யோ டெஸ்ட் வச்சுருந்தா நாங்க 3 பேர் மட்டும்தான் தேறியிருப்போம்.. முகமது கைஃப் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published May 22, 2020, 5:35 PM IST
Highlights

தான் ஆடிய காலத்தில் இந்திய வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட் நடத்தியிருந்தால், யார் யார் தேறியிருப்பார்கள் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஃபிட்னெஸுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தோனி கேப்டனாக இருந்தபோதே, ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார். அதன்பின்னர் கோலி கேப்டனான பிறகு சற்று கூடுதலாக ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

ஆனால் சச்சின், கங்குலி, டிராவிட், யுவராஜ் சிங், கைஃப், இர்ஃபான் பதான், ஜாகீர் கான் ஆகியோர் ஆடிய காலக்கட்டத்தில் யோ யோ டெஸ்ட்டெல்லாம் கிடையாது. வீரர்கள் ஃபிட்னெஸுடன் தான் இருந்தார்கள். ஆனாலும் இப்போதைய இந்திய வீரர்கள் அளவிற்கான ஃபிட்னெஸுடன் இல்லை. அதனால் தான் தற்போதைய இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு நிகரான சிறந்த ஃபீல்டிங் அணியாக திகழ்கிறது.

சமகால கிரிக்கெட்டில் ஃபிட்னெஸ் என்பது மிக முக்கியமாகிவிட்டது. அப்போதெல்லாம் திறமையான பேட்ஸ்மேனாக இருந்தால் மட்டும் போதும். ஆனால் இப்போது அப்படியில்லை, எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாகவோ அல்லது பவுலராகவோ இருந்தாலும், ஃபிட்னெஸும் அவசியமாகிறது. எனவே யோ யோ டெஸ்ட்டின் மூலம் வீரர்களின் ஃபிட்னெஸ் பரிசோதிக்கப்படுகிறது. 

திறமையான வீரராக இருந்தாலும், யோ யோ டெஸ்ட்டில் தேறவில்லையென்றால், அணியில் இடம் கிடையாது என்ற சூழல் தான் உள்ளது. 

இந்நிலையில், 2000ம்களில் யோ யோ டெஸ்ட் இல்லாதபோதும் சிறந்த ஃபிட்னெஸுடனும் தலைசிறந்த ஃபீல்டருமாக திகழ்ந்த முகமது கைஃபிடம், அவரது காலக்கட்டத்தில் யோ யோ டெஸ்ட் இருந்திருந்தால் யார் யார் தேறியிருப்பார்கள் என்று, ஹெலோ லைவ் உரையாடலில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கைஃப், கிரிக்கெட் வீரர்களுக்கு ஃபிட்னெஸ் மிக முக்கியம். எங்கள் காலத்தில் யோ யோ டெஸ்ட் வைத்திருந்தால், நானும் லக்‌ஷ்மிபதி பாலாஜியும் மட்டுமே அனைத்து அளவுகோல்களிலும் தேறியிருப்போம். எங்களுக்கு அடுத்து யுவராஜ் சிங் தேறியிருப்பார். மற்ற யாருமே தேறியிருக்கமாட்டார்கள் என்று ஓபனாக பதிலளித்தார் கைஃப்.

கைஃப் ஆடிய காலக்கட்டத்தில் சீனியர்களான சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோரும் ஆடினர். இந்நிலையில், தாங்கள் 3 பேரை தவிர வேறு யாருமே யோ யோ டெஸ்ட்டில் தேறியிருக்கமாட்டார்கள் என்று கைஃப் வெளிப்படையாக துணிச்சலாகவும் பதிலளித்துள்ளார். 

click me!