பிசிசிஐயின் விதிகளை மீறியதாக விராட் கோலி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது. ஆசியக் கோப்பைக்கு தயாராகும் வகையில், இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கு முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்றுவிட்டு இத்தனை நாட்களாக ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் உள்ளிட்ட வீரர்கள் தங்களது உடல் தகுதியை நிரூபிக்கும் வகையில் யோ யோ டெஸ்டில் பங்கேற்றுள்ளனர்.
யோ யோ டெஸ்ட் செய்த, ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா!
இந்த டெஸ்டில் பங்கேற்ற விராட் கோலி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தான் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், விராட் கோலி தான் வெற்றிகரமாக யோ யோ டெஸ்ட் முடித்துவிட்டேன் என்றும், ஸ்கோரானது 17.2 என்று வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால், பிசிசிஐ வைத்துள்ள குறைந்தபட்ச ஸ்கோரே 16.5 மட்டுமே. அப்படியிருக்கும் போது விராட் கோலி 17.2 என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மென்டாலிட்டி மான்ஸ்டர் – பிரக்ஞானந்தாவை புகழ்ந்து பேசிய கார்ல்சன்!
பிசிசிஐ தொடர்பான எந்த ஒரு விஷயங்களையும், ரகசியத்தையும், வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், வீரர்கள் பயிற்சி செய்யும் போது எடுக்கும் புகைப்படம் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளத்தில் வெளியிட எந்த தடையும் இல்லை.
பதிவுக்கு தற்போது பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் பிசிசிஐ வீரர்களுக்காக வைத்துள்ள குறைந்தபட்ச ஸ்கூரை 16.5 தான். யோ யோ டெஸ்டில் என்ன ஸ்கோர் எடுத்தீர்கள் என்பது குறித்து வெளியிடக் கூடாது என்று பிசிசிஐ எச்சரித்தும் விராட் கோலி இவ்வாறு செய்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. வரும் 29 ஆம் தேதி வரையில் இந்திய வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு அதன் பிறகு இலங்கைக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.