#IPL2022 புதிய 2 அணிகளுக்கு 6 நகரங்களை ஷார்ட் லிஸ்ட் செய்த பிசிசிஐ..!

By karthikeyan VFirst Published Sep 6, 2021, 10:24 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக 2 அணிகளை சேர்ப்பதற்கு பிசிசிஐ தீர்மானித்துள்ள நிலையில், அந்த 2 புதிய அணிகளுக்கு 6 நகரங்களை ஷார்ட் லிஸ்ட் செய்துள்ளது பிசிசிஐ.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எஞ்சிய போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன.

அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இதுவரை 8 அணிகள் ஐபிஎல்லில் ஆடிவரும் நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

அடுத்த சீசனில் 2 புதிய அணிகளை சேர்ப்பது ஏற்கனவே உறுதியாகியிருந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. அதன்படி, புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்தது.

அந்த 2 அணிகள் எந்தெந்த நகரங்களை மையப்படுத்தியதாக இருக்கும் என்ற கருத்துகள் உலா வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், 6 நகரங்களை ஷார்ட் லிஸ்ட் செய்துள்ளது பிசிசிஐ.

அதன்படி, கிழக்கு மண்டலத்திலிருந்து கவுஹாத்தி, ராஞ்சி, கட்டாக், மேற்கிலிருந்து அகமதாபாத், மத்திய மண்டலத்திலிருந்து லக்னோ மற்றும் வடக்கிலிருந்து தர்மசாலா ஆகிய 6 நகரங்களை ஷார்ட் லிஸ்ட் செய்துள்ளது பிசிசிஐ. இந்த 6 நகரங்களில் இரண்டை மையப்படுத்தியதாக இருக்கும் புதிய அணிகள்.
 

click me!