2023 ஆசிய கோப்பை: இந்திய அணி பாகிஸ்தானுக்கு போகாது.. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்ட அறிவிப்பு

By karthikeyan VFirst Published Oct 18, 2022, 3:35 PM IST
Highlights

2023ம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கோப்பை தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு இல்லாததால் இந்திய அரசு, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு சென்று ஆட அனுமதிப்பதில்லை..

2012ம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடவில்லை. 2006ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே விரும்புகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ  அதிகாரிகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.

இதையும் படிங்க - பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம்.. புதிய நிர்வாகிகளின் முழு பட்டியல்

அடுத்த ஆண்டு 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு அனுமதித்தால் தான் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடியும்.

இந்நிலையில் இன்று நடந்த பிசிசிஐ பொதுக்குழுவில் அடுத்த ஆண்டு நடக்கும் ஐசிசி தொடர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து பல ஆலோசனைகள் நடந்தன.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: யு.ஏ.இ-க்கு ஆடும் தமிழகத்தை சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை

பிசிசிஐ பொதுக்குழுவுக்கு பின் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடும் விஷயத்தில் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. 2023 ஆசிய கோப்பை தொடர் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்றார் ஜெய் ஷா. 
 

click me!