விராட் கோலியின் மோசமான ஃபார்ம்.. முதல் முறையாக மௌனம் கலைத்த தாதா

Published : Apr 29, 2022, 05:11 PM ISTUpdated : Apr 29, 2022, 05:14 PM IST
விராட் கோலியின் மோசமான ஃபார்ம்.. முதல் முறையாக மௌனம் கலைத்த தாதா

சுருக்கம்

மோசமான ஃபார்மில் இருப்பதால் ஐபிஎல் 15வது சீசனில் படுமோசமாக பேட்டிங் ஆடிவரும், ஃபார்மில் இல்லாத விராட் கோலி குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார்.

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார். 

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவரும் விராட் கோலி, பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்தும், ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.

ஆனாலும் பேட்டிங்கில் அவரால் இன்னும் பெரிய ஸ்கோர் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்ள நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது. 

ஐபிஎல்லில் விராட் கோலி எப்படி ஆடுகிறார், ஃபார்முக்கு திரும்பி தெறிக்கவிடுகிறாரா என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல்லிலும் கோலியின் மோசமான ஃபார்ம் தொடர்ந்துவருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 9 போட்டிகளில் ஆடி 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் கோலி. அவரது சராசரி வெறும் 16. இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிட்டத்தட்ட 40வது இடத்தில் உள்ளார் கோலி.

மேலும் படிக்க - லெக் ஸ்பின் வீசி ஸ்டம்ப்பை கழட்டிய சச்சின்.. தலைவா மீண்டும் களமிறங்கு! MI-க்காக மீண்டும் ஆடும் சச்சின்..?

விராட் கோலி மட்டுமல்லாது ரோஹித் சர்மாவும் ஐபிஎல்லில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முக்கியமான வீரர்களான ரோஹித் மற்றும் விராட் ஆகிய இருவரும் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாதது கவலையளிக்கும் நிலையில், அதுகுறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சௌரவ் கங்குலி, ரோஹித் மற்றும் விராட் ஆகிய இருவருமே சிறந்த வீரர்கள். விரைவில் அவர்கள் ஃபார்முக்கு திரும்பி ஸ்கோர் செய்வார்கள். விராட் கோலியின் மண்டையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் விரைவில் ஃபார்முக்கு திரும்பி பெரிய ஸ்கோர்களை குவிப்பார். அவர் தலைசிறந்த வீரர் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!