ஆசிய கோப்பையில் ஆட இந்த டீம் போதும்.. செகண்ட் ஸ்ட்ரிங் அணியை இலங்கைக்கு அனுப்பும் பிசிசிஐ

By karthikeyan VFirst Published Mar 8, 2021, 10:54 PM IST
Highlights

ஆசிய கோப்பையில் ஆட பிசிசிஐ, இந்திய அணியின் முதன்மை வீரர்களை அனுப்ப முடியாத சூழலில் இருப்பதால், செகண்ட் ஸ்ட்ரிங் அணியை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. ஜூன் 18 முதல் 22 வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. அந்த ஃபைனல் முடிந்ததும், இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

எனவே இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடி முடிந்த பின்னரும்  இங்கிலாந்திலேயே இருக்கும். இதற்கிடையே ஜூன் இறுதியில் இலங்கையில் ஆசிய கோப்பை நடக்கவுள்ளது. இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், ஆசிய கோப்பையில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவானால் ஆசிய கோப்பை தள்ளிப்போகும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

ஆனால் ஆசிய கோப்பையில் ஆட மறுக்க பிசிசிஐ நினைக்கவோ, விரும்பவோ இல்லை. இங்கிலாந்து சுற்றுப்பயணமும் முக்கியம்; அதேவேளையில் ஆசிய கோப்பையிலும் ஆட வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிக முக்கியம் என்பதால், இந்திய அணியின் பிரதான வீரர்கள் இங்கிலாந்தில் ஆடுவார்கள். முதன்மை வீரர்கள் நிலையில் இல்லாத செகண்ட் ஸ்ட்ரிங் இந்திய வீரர்களை இலங்கையில் நடக்கும் ஆசிய கோப்பையில் ஆட இலங்கைக்கு அனுப்பிவைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதைத்தவிர வேறு வழியும் இல்லை என்பதால் அதைத்தான் செய்தாக வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இதன்மூலம், இந்திய அணியில் ஆட தகுதிவாய்ந்த, ஆனால் அதேவேளையில் அணியில் இடம் கிடைக்காத நிலையில் இருந்துவந்த வீரர்களுக்கு இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கும். சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
 

click me!