டி20 அணியில் மீண்டும் களமிறங்கும் சீனியர் வீரர்..? ரசிகர்கள் செம ஹேப்பி

By karthikeyan VFirst Published Aug 13, 2022, 10:03 PM IST
Highlights

டி20 அணியில் முகமது ஷமி மீண்டும் எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்று பிசிசிஐ அதிகாரி கருத்து கூறியுள்ளார்.
 

ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்த 2 கோப்பைகளையும் வெல்லும் முனைப்பில் உள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. 

ஆசிய கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. பும்ரா காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியாதபோதும், சீனியர் பவுலரான முகமது ஷமி ஆசிய கோப்பைககன அணியில் எடுக்கப்படவில்லை. 

இதையும் படிங்க - டக் அவுட் ஆகுறதுக்கா உனக்கு கோடிகளை கொட்டி கொடுக்குறோம்.? ரோஸ் டெய்லரை பளார்னு அறைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஓனர்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் மட்டுமே சீனியர் ஃபாஸ்ட் பவுலர். அவருடன் இளம் ஃபாஸ்ட் பவுலர்களான ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் எடுக்கப்பட்டுள்ளனர்.  ஷமி எடுக்கப்படாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் ஆடிய ஷமி, நமீபியாவுக்கு எதிராக ஆடியதுதான் கடைசி டி20  போட்டி. அதன்பின்னர் இந்திய டி20 அணியில் ஷமி எடுக்கப்படவேயில்லை. டி20 உலக கோப்பைக்கு பின் 11 ஃபாஸ்ட் பவுலர்கள் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக ஆடியிருக்கின்றனர். ஆனால் ஷமிக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் ஷமி டி20 அணியில் புறக்கணிக்கப்படுகிறார். 

இதையும் படிங்க - நீங்க தோனியை யூஸ் பண்ண முடியாது.! சிஎஸ்கேவிற்கு செக் வைத்த பிசிசிஐ

இந்நிலையில், மீண்டும் டி20 அணியில் முகமது ஷமி எடுக்கப்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், ஷமிக்கு வயது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் அவரது பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் அவர் டி20 அணிகளில் எடுக்கப்படாததற்கான காரணம் அவரிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. முன்னணி ஃபாஸ்ட் பவுலர்கள் இருவர் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக ஷமி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.
 

click me!