டிராவிட், ரோஹித் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுங்க..! தினேஷ் கார்த்திக் விவகாரத்தில் முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 13, 2022, 8:11 PM IST
Highlights

தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் எடுக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா மீது நம்பிக்கை வைத்து அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு  முன்னாள் வீரர் மனிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
 

ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் அடுத்தடுத்து நடக்கவுள்ள நிலையில், அந்த 2 கோப்பைகளையும் வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. 

இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என பேட்டிங் ஆர்டர் வலுவாக இருக்கிறது.

இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் வீரர் புறக்கணிப்பு..! ரிக்கி பாண்டிங் சொல்லும் நியாயமான காரணம்

தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக இந்திய அணியில் தனது இடத்தை பிடித்துவிட்டார். ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாது தினேஷ் கார்த்திக்கே 7வது பேட்ஸ்மேனாக இறங்குகிறார் என்றால், இந்திய அணி 4 பவுலர்களுடன் மட்டுமே ஆடமுடியும். ஹர்திக் பாண்டியா 5வது பவுலராக இருப்பார். அது கூடுதல் பவுலிங் ஆப்சன் இல்லாமல் செய்துவிடும்.

ஆனால் ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து 5 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் ஆட விரும்பமாட்டார். எனவே, கோலி, ராகுல் ஆடும் லெவனில் இருக்கும்போது தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பளிப்பது சரியாக இருக்காது என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து கூறியுள்ளனர்.

தினேஷ் கார்த்திக் ஃபினிஷரே இல்லை என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்தார்.  8-10 ஓவர்களிலிருந்து ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்று முடித்துக் கொடுப்பவர் தான் ஃபினிஷரே தவிர, கடைசி 5 ஓவர்களில் அடித்து ஆடுபவர் ஃபினிஷர் கிடையாது. எனவே தினேஷ் கார்த்திக் ஃபினிஷரே இல்லை என்று ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.

இதையும் படிங்க - நீங்க தோனியை யூஸ் பண்ண முடியாது.! சிஎஸ்கேவிற்கு செக் வைத்த பிசிசிஐ

இப்படியாக தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் ஆடுவது குறித்தும், இந்திய அணியின் ஆடும் லெவனில் அவரது இடம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்திய அணி நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு முன்னாள் வீரர் மனிந்தர் சிங் கருத்து கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய மனிந்தர் சிங், உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில் புதிய பரிசோதனைகளை மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை. இந்த பரிசோதனைகள் பலனளித்தால், அதை பாராட்டுவார்கள். 

ஒவ்வொரு பயிற்சியாளரும், ஒவ்வொரு கேப்டனும் புதிய திட்டங்களுடன் வருவார்கள். எனவே பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணி நிர்வாகம், தேர்வாளர்களின் முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று மனிந்தர் சிங் கூறியுள்ளார்.
 

click me!