வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இடம் பெறாத இந்திய வீரர்களுக்கு அயர்லாந்து தொடரில் வாய்ப்பு கொடுத்த பிசிசிஐ!

By Rsiva kumar  |  First Published Aug 2, 2023, 12:46 PM IST

அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெறும் இந்திய அணி வீரர்கள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர்.


வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்று கைப்பற்றியது. இதே போன்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடை ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

World Cup 2023 Re-Schedule: இந்தியா பாகிஸ்தான் போட்டி உள்பட உலகக் கோப்பை 2023 தொடருக்கான 3 போட்டியில் மாற்றம்?

Tap to resize

Latest Videos

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்க இருக்கிறது. இந்த தொடர் நாளை 3 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த டி20 தொடரைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செல்கிறது. அங்கு, ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

IND vs WI: 2021 ஆம் ஆண்டு முதல் விராட் கோலி இடம் பெறாத ஒரு நாள் போட்டிகள் எத்தனை தெரியுமா?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறாத இந்திய வீரர்களுக்கு இந்த அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், அக்‌ஷர் படேல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றவர்கள்.

WI vs IND ODI Series: 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 13 ஆவது முறையாக தொடரை கைப்பற்றி சாதனை!

கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் ஓய்வில் இருந்து வந்த ஜஸ்ப்ரித் பும்ரா அயர்லாந்து தொடரின் மூலமாக அணிக்கு திரும்பியுள்ளார். அதுவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து தொடரின் மூலமாக ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இதில் ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் முதல் முறையாக டி20 போட்டிகள் கொண்ட தொடர் மூலமாக இந்திய அணியில் அறிமுகமாகின்றனர். இருவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இடம் பெற்றுள்ளனர்.

கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை. ரிஷப் பண்ட் உடல் தகுதியை இதுவரையில் நிரூபிக்கவில்லை. இன்னும், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆசிய விளையாட்டு போட்டிகள்.. அறிவிக்கப்பட்ட இந்திய கால்பந்தாட்ட அணி - களமிறங்கும் தமிழக வீரர் சிவசக்தி!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னாய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.

WI vs IND 3rd ODI: இஷான் கிஷான், கில், ஹர்திக் பாண்டியா அதிரடி; இந்தியா 351 ரன்கள் குவிப்பு!

click me!