Annual Player Contracts: பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த பட்டியல்: யார் யாருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Mar 27, 2023, 1:37 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர்களின் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
 


இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களுக்கு வருடாந்திர ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பருக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், ஏ பிளஸ், ஏ பிரிவு, பி பிரிவு, சி பிரிவு என்று வீரர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் வீரர்களுக்கு வருடாந்திர சம்பளம் வழங்கப்படுகிறது.

ஏ பிளஸ் - ரூ.7 கோடி
ஏ பிரிவு - ரூ.5 கோடி
பி பிரிவு - ரூ.3 கோடி
சி பிரிவு - ரூ.1 கோடி

Tap to resize

Latest Videos

இதில், எந்தெந்த பிரிவுகளில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க...

ஏ பிளஸ் - ரூ.7 கோடி

மிகவும் உயர்ந்த பிரிவான ஏ பிளஸ் பிரிவில் 4 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அதில், ரோகித் சர்மா, விராட் கோலிக்கு முன்னுரிமை. இவர்கள் தவிர, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

  1. ரோகித் சர்மா
  2. விராட் கோலி
  3. ரவீந்திர ஜடேஜா
  4. ஜஸ்ப்ரித் பும்ரா

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சிறந்த கேட்ச் ஆஃப் தி சீசன்; யஷ்டிகா பாட்டீயாவிற்கு வளர்ந்து வரும் சிறந்த வீராங்கனை!


ஏ பிரிவு - ரூ.5 கோடி

ஏ பிளஸ் பிரிவுக்கு அடுத்த வரிசையில் இடம் பெற்றிருப்பது ஏ பிரிவு. இதில், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட்ட், அக்‌ஷர் படேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

  1. ஹர்திக் பாண்டியா
  2. ரவிச்சந்திரன் அஸ்வின்
  3. முகமது ஷமி
  4. ரிஷப் பண்ட்
  5. அக்‌ஷர் படேல்

பி பிரிவு - ரூ. 3 கோடி

  1. சட்டீஸ்வர் புஜாரா
  2. கே.எல். ராகுல்
  3. ஷரேயாஸ் ஐயர்
  4. முகமது சிராஜ்
  5. சூர்யகுமார் யாதவ்
  6. சுப்மன் கில்

ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு தங்கம் வென்று அசத்தல்!


சி பிரிவு - ரூ. 1 கோடி

  1. உமேஷ் யாதவ்
  2. ஷிகர் தவான்
  3. ஷர்துல் தாக்கூர்
  4. இஷான் கிஷான்
  5. தீபக் ஹூடா
  6. யுஸ்வேந்திர சாஹல்
  7. குல்தீப் யாதவ்
  8. வாஷிங்டன் சுந்தர்
  9. சஞ்சு சாம்சன்
  10. அர்ஷ்தீப் சிங் 
  11. கே.எஸ்.பரத்

இந்திய அணிக்காக இவர்கள் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும், அவர்கள் இடம் பெற்றுள்ள பிரிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். பொதுவாக ஏ பிளஸ் பிரிவுகளி இடம் பெறும் வீரர்கள் அனைத்து விதமான போட்டிகளில் இடம் பெறும் வீரராக இருக்க வேண்டும் என்பது விதி.
ஏதேனும் ஒரு பிரிவில் ஆடாவிட்டாலும் ஏ பிளஸ் வீரராக தகுதி உயர முடியாது.

ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல்

இதற்கு முன்னதாக ஏ பிரிவில் இருந்த ரவீந்திர ஜடேஜா இந்த முறை ஏ பிளஸ் பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். இதில் என்னவொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், ஏ பிரிவில் இருந்த கே.எல். ராகுல் பி பிரிவுக்கு தரம் குறைக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் அவரது பேட்டிங் சரிவர இல்லை என்பது தான். இவரைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூரும் பி பிரிவில் இருந்து சி பிரிவுக்கு தரம் குறைக்கப்பட்டுள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்தில் ரசிச்சு ரசிச்சு ரசிகர்கள் அமரும் இருக்கைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் தோனி!

ஹர்திக் பாண்டியா உயர்வு:

கடந்த ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, இந்திய டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். இவரது தலைமையிலான இந்திய அணி பல தொடர்களை வென்றது. அது மட்டுமின்றி தற்போது கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவர் சி பிரிவில் இருந்து ஏ பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட்டார். வரும் அக்டோபர் மாதம் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பிறகு  முழு நேரமாக ஒரு நாள் அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மகளிர் பிரீமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு சஞ்சு சாம்சன் சி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று கே எஸ் பரத், இஷான் கிஷான், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் ஹூடா ஆகியோரும் சி பிரிவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆண்டு சம்பளத்தைத் தொடர்ந்து அவர்கள் விளையாடும் போட்டிகளுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்த பட்டியலிலிருந்து புவனேஷ்வர் குமார் வெளியேற்றப்பட்டுள்ளார்.

click me!