ஐபிஎல் 2022: ஐபிஎல் அணிகளுக்கு செம குட் நியூஸ்..! மெகா ஏலத்துக்கு முன் பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Nov 1, 2021, 4:28 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
 

2008ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. இதுவரை நடந்த 14 சீசன்களிலும் 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கொண்ட அகமதாபாத் நகரின் பெயரில் ஒரு அணியும், லக்னோ அணியும் அடுத்த சீசனில் புதிதாக இணைகின்றன. லக்னோ அணியை ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழுமமும், அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனமும் வாங்கின.

இதையும் படிங்க - அஷ்வின் ஆடியிருந்தா மட்டும் பெருசா என்ன செஞ்சுருப்பாருனு எனக்கு தெரியல..! பும்ரா அதிரடி

2 அணிகள் புதிதாக இணைவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கிறது. இந்நிலையில், ஏற்கனவே ஆடிவரும் 8 அணிகளும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதிக்கு என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

இதையும் படிங்க - எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான்..! நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல கூறிய இந்திய அணி கேப்டன் கோலி

இதுதொடர்பாக  பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், ஐபிஎல்லில் ஏற்கனவே ஆடிவரும் 8 அணிகளும், ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்றும்  2 புதிய அணிகள் 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பாக எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்

8 பழைய அணிகளும் 3 இந்தியர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது 2 இந்தியர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 4 பேரை தக்கவைக்கலாம். வெளியிடப்பட்ட வீரர்களின் பட்டியலிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ 3 வீரர்களை 2 புதிய அணிகளும் தேர்வு செய்துகொள்ளலாம். டிசம்பர் 1 முதல் 25ம் தேதிக்குள் புதிய அணிகள் 3 வீரர்களை தேர்வு செய்யலாம்.

இதையும் படிங்க - ஆடவர் கிரிக்கெட் அணியின் முதல் பெண் பயிற்சியாளர் சாரா டெய்லர்..! இவர் தான் “பெண் தோனி” தெரியுமா..?

இதுவரை வீரர்களை ஏலமெடுக்க ஒவ்வொரு அணியும் ரூ.85 கோடி செலவிட அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த மெகா ஏலத்தில் ரூ.90 கோடி  செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. 4 வீரர்களை தக்கவைக்கும் அணிகளுக்கு ரூ.42 கோடி கழிக்கப்படும். 3 வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் அணிகளுக்கு ரூ.33 கோடி கழிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க - எவின் லூயிஸின் ஆல்டைம் டி20 லெவனில் 5 இந்திய வீரர்கள்..! தல தோனி தான் கேப்டன்
 

click me!