#IPL2022 புதிதாக 2 அணிகள் சேர்ப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ

By karthikeyan VFirst Published Aug 31, 2021, 6:27 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனில்(2022) புதிதாக 2 அணிகளை சேர்ப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எஞ்சிய போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன.

அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இதுவரை 8 அணிகள் ஐபிஎல்லில் ஆடிவரும் நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

அடுத்த சீசனில் 2 புதிய அணிகளை சேர்ப்பது ஏற்கனவே உறுதியாகியிருந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. அதன்படி, புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுள்ள நிறுவனங்களால் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. 

கூடுதலாக 2 புதிய அணிகள் சேர்க்கப்படுவதன் மூலம் பிசிசிஐக்கு கூடுதலாக ரூ.5000 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!