தென்னாப்பிரிக்க லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் ஓய்வு..! அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

By karthikeyan VFirst Published Aug 31, 2021, 5:40 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க அணியின் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலரும் ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவருமான டேல் ஸ்டெய்ன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவித்துள்ளார்.
 

இந்த தலைமுறை கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன். வாசிம் அக்ரமை போல 150 கிமீ மேலான வேகத்துடனும் ஸ்விங்கும் செய்து வீசக்கூடியவர் டேல் ஸ்டெய்ன். 

2004ம் ஆண்டிலிருந்து தென்னாப்பிரிக்க அணியில் ஆடும் டேல் ஸ்டெய்ன், 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 439 விக்கெட்டுகளையும் 125 ஒருநாள் போட்டிகளில் ஆடி 196 விக்கெட்டுகளையும் 47 டி20 போட்டிகளில் ஆடி 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

அதிகமான காயங்களால் அவதிப்பட்டதால், அவரால் சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடமுடியவில்லை. தனது கெரியரில், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி, பாண்டிங், பிரயன் லாரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், பிரண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட பல சிறந்த வீரர்களுக்கு பந்துவீசியுள்ளார். 

கடந்த 2019 இலங்கைக்கு எதிரான தொடர் தான் அவரது கடைசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர். டி20 கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த தொடரில் கடைசியாக ஆடினார். ஐபிஎல்லில் டெக்கான் சார்ஜர்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார். ஐபிஎல் மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பேஷ் லீக் உள்ளிட்ட வெளிநாட்டு லீக் தொடர்களிலும் ஆடியுள்ளார் ஸ்டெய்ன்.

இந்நிலையில், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார் டேல் ஸ்டெய்ன்.
 

click me!