WI vs BAN: 2வது ஒருநாள் போட்டி டாஸ் ரிப்போர்ட்..! வெஸ்ட் இண்டீஸுக்கு வாழ்வா சாவா போட்டி

Published : Jul 13, 2022, 06:53 PM IST
WI vs BAN: 2வது ஒருநாள் போட்டி டாஸ் ரிப்போர்ட்..! வெஸ்ட் இண்டீஸுக்கு வாழ்வா சாவா போட்டி

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.

2வது போட்டி இன்று கயானாவில் நடக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் வங்கதேச அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்கியுள்ளன.

இதையும் படிங்க - ENG vs IND: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் தோற்றால் தொடரை இழந்துவிடும் என்பதால் இது அந்த அணிக்கு முக்கியமான போட்டி. கயானாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

வங்கதேச அணி:

தமீம் இக்பால் (கேப்டன்), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மொசாடெக் ஹுசைன், மெஹிடி ஹசன், நசும் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம்.

இதையும் படிங்க - 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா ஆடமுடியாது..? இதுதான் காரணம்

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கைல் மேயர்ஸ், ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஷமர் ப்ரூக்ஸ், பிரண்டன் கிங், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவமன் பவல், கீமோ பால், ரொமாரியோ ஷெஃபெர்டு, அகீல் ஹுசைன், குடாகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசஃப்.
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!