
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது போட்டி நாளை லண்டன் லார்ட்ஸில் நாளை(ஜூலை14) நடக்கிறது.
2வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், 2வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் களமிறங்குகின்றன.
இதையும் படிங்க - ரோஹித் சர்மா மாபெரும் சாதனை.. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாப் இந்திய வீரர்..! சர்வதேச அளவில் 4ம் இடம்
2வது போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்யப்படலாம். முதல் போட்டியில் காயத்தால் ஆடாத விராட் கோலி, 2வது போட்டியில் ஆடுவார் என்று தெரிகிறது. எனவே ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படுவார்.
இந்த ஒரு மாற்றத்தை தவிர வேறு மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை; அதற்கான அவசியமும் இல்லை.
இதையும் படிங்க - 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா ஆடமுடியாது..? இதுதான் காரணம்
உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட்கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.