BAN vs IND: இந்திய அணிக்கு ஆட்டம் காட்டிய ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய்; வங்கதேச 265 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Sep 15, 2023, 7:40 PM IST

இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்கள் குவித்துள்ளது.


இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்ற நிலையில், இந்தப் போட்டியில் 5 மாற்றங்களை செய்துள்ளார். அதன்படி விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷர்துல் தாக்கூர், பிரஷித் கிருஷ்ணா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

IND vs BAN போட்டியில் கையில் கூல்டிரிங்ஸ் எடுத்துக் கொண்டு வேடிக்கையாக ஓடி வந்த கோலி; வைரலாகும் வீடியோ!

Tap to resize

Latest Videos

இந்தப் போட்டியின் மூலமாக திலக் வர்மா சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். இதே போன்று வங்கதேச அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி, தன்சிம் ஹசன் ஷாகிப் இந்தப் போட்டியின் மூலமாக சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகிறார். இதையடுத்து வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது.  இதில் தொடக்க வீரர்களாக தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினர். ஆனால், லிட்டன் தாஸ் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஷமி பந்தில் கிளீன் போல்டானார்.

தந்தையான ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்: லோகன் மேவரிக் மேக்ஸ்வெல் என்று பெயரிட்ட மேக்ஸ்வெல் – வினி ராமன் தம்பதி!

அடுத்து மற்றொரு தொடக்க வீரர் தன்ஷித் ஹசன் 13 ரன்களில் ஷர்துல் தாக்கூர் பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து வந்த அனாமுல் ஹக் 4 ரன்களில் வெளியேறினார். இவர், இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி ஆரம்ப காலகட்டத்தில் வைத்திருந்த ஹேர்ஸ்டைலில் வந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு கேப்டன் ஷாகிப் அல் ஹசன் களமிறங்கினார். அவர், நின்னு நிதானமாக விக்கெட் கொடுக்காமல் ரன்கள் சேர்த்தார்.

SL vs PAK: இலங்கை அணிக்கு புதிய சிக்கல்; மஹீஷ் தீக்‌ஷனாவிற்கு தசைப்பிடிப்பு; இறுதிப் போட்டியில் வாய்ப்பில்லை!

இதற்கிடையில், மெஹிடி ஹசன் மிராஸ் களமிறங்கி அவர் 14 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்து தத்தளித்தது. அப்போது தான் ஷாகிப் மற்றும் தவ்ஹீத் ஹிரிடோய் இருவரும் பார்ட்னர்ஷிப் போட்டு ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டிற்கு 101 ரன்கள் குவித்தது. அப்போது ஷாகிப் அல் ஹசன் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு தவ்ஹீத் 54 ரன்களில் வெளியேறினார்.

இந்த நிலையில், தான் ஷமீம் ஹூசைன் களமிறங்கினார். அவர் 1 ரன் எடுத்த நிலையில், ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ரவீந்திர ஜடேஜா ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். மேலும், இதற்கு முன்னதாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 ரன்களுக்கு மேல் கைப்பற்றிய சீனியர் வீரர்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.

அனில் கும்ப்ளே – 337 விக்கெட்டுகள்

ஜவஹல் ஸ்ரீநாத் – 315 விக்கெட்டுகள்

அஜித் அகர்கர் – 288 விக்கெட்டுகள்

ஜாகிர்கான் – 282 விக்கெட்டுகள்

ஹர்பஜன் சிங் – 269 விக்கெட்டுகள்

கபில் தேவ் – 253 விக்கெட்டுகள்

ரவீந்திர ஜடேஜா – 200 விக்கெட்டுகள்

அதுமட்டுமின்றி 2500 ரன்களுக்கு மேல் எடுத்து 200 விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார். கபில் தேவ் 253 விக்கெட்டுகளும், 3783 ரன்களும் எடுத்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 2578 ரன்களுடன், 200 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

IND vs BAN: திலக் வர்மா அறிமுகம், சூர்யகுமார் யாதவ், பிரஷித் கிருஷ்ணா, ஷமிக்கு வாய்ப்பு: இந்தியா பவுலிங்!

அடுத்து வந்த நசும் அகமது கடைசி நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 44 ரன்களில் ஆட்டமிழக்க, மஹெதி ஹசன் 29 ரன்களும், தன்ஷிம் ஹசன் ஷாகிப் 14 ரன்களும் சேர்க்கவே வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 265 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இந்திய அணி சில கேட்சுகளை இழந்தது. அதோடு பீல்டிங்கிலும் சில ரன்களை கோட்டைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SL vs PAK: 5 முறை இறுதிப் போட்டி, 2 முறை சாம்பியன்; சிக்கலில் சிக்கி தவித்து பரிதாபமாக வெளியேறிய பாகிஸ்தான்!

click me!