கிளென் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் கிளென் மேக்ஸ்வெல். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். மேக்ஸ்வெல் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய வாழ் தமிழ் பெண்ணான வினி ராமனை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து 5 ஆண்டு காதல் வாழ்க்கைக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் தமிழ் மற்றும் ஆஸ்திரேலிய முறைப்படி நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து கடந்த மே மாதம் குழந்தை பிறக்க இருப்பதாக வினி ராமன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
கடந்த ஜூலை மாதம் வினி ராமனுக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. வினி ராமனின் வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. சிறு குழந்தையுடன் இருப்பது போன்றும், கணவர் மேக்ஸ்வெல் உடன் இருப்பது போன்றும் உள்ள புகைப்படங்களை வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு லோகன் மேவரிக் மேக்ஸ்வெல் என்று பெயரிட்டுள்ளனர். கடந்த 11 ஆம் தேதியே குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து வினி ராமன் இன்று கூறியுள்ளார். இதன் மூலமாக 34 வயதான மேக்ஸ்வெல் தற்போது தந்தையாகியுள்ளார்.
பெற்றோர்களான மேக்வெல் மற்றும் வினி ராமன் தம்பதிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அனுஷ்கா சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.