ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர் நஜ்முல் ஷாண்டோ 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த 14 ஆம் தேதி தாகா மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சு தீர்மானித்தது.
வரலாற்றில் சிறப்பான கேட்ச்: பறந்து பிடித்த இங்கிலாந்து வீரர் பிராட்லி ஹர்ரி: குவியும் பாராட்டுக்கள்!
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணியில் நஜ்முல் ஷாண்டோ 175 பந்துகளில் 23 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 146 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதே போன்று மஹமதுல் ஹாசன் ராய் 76 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹீம் 47 ரன்னிலும், மெஹிடி ஹாசன் மிராஸ் 48 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 382 ரன்கள் எடுத்தது.
ஒரு போதும் ஒரு பந்து வீச்சாளராக மாறவே கூடாது – ரவிச்சந்திரன் அஸ்வின் ஃபீல் அன்ஹேப்பி!
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அஃப்சார் ஷசாய் 36 ரன்களும், நசீர் ஜமால் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 236 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில் ஜாகீர் ஹாசன் 71 ரன்கள் சேர்த்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்தார். நஜ்முல் ஷாண்டோ 151 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 124 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மோமினுல் 145 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 121 ரன்கள் எடுத்தார். இறுதியாக வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சாதனை மன்னர்கள்!
இதன் மூலமாக 661 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, ஆப்கானிஸ்தான் அணி 546 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், இந்த போட்டியின் போது வங்கதேச அணி வீரர் நஜ்முல் ஷாண்டோ டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்ததன் மூலமாக 2ஆவது வங்கதேச வீரராக இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மொமினுல் ஹக் இந்த சாதனையை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.