இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும், வங்கதேச அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஷாகிப் அல் ஹசனுக்குப் பதிலாக நசும் அகமது அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், தஸ்கின் அகமதுவிற்குப் பதிலாக ஹசன் மஹ்முத் அணியில் இடம் பெற்றுள்ளார்.
India vs Bangladesh, Pune Match: வலியோடு விளையாட அடம் பிடிக்கும் வங்கதேச கேப்டன் – காரணம் என்ன?
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
வங்கதேசம்:
நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), லிட்டன் தாஸ், தன்சித் ஹசன் தமீம், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா ரியாத், மெஹிடி ஹசன் மிராஸ், நசுன் அகமது, முஸ்தஃபிஜூர் ரஹ்மான், ஹசன் மஹ்முத், ஷோரிஃபுல் இஸ்லாம்.
IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிராக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2 முறை சதம் அடித்த ரோகித் சர்மா!
இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆதலால், இந்தப் போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேச அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணி 4 முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பையில் 5ஆவது முறையாக இந்தியா – வங்கதேசம் பலப்பரீட்சை: வெற்றி யாருக்கு?
ஒரேயொரு போட்டியில் மட்டுமே வங்கதேச அணி வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், 40 ஒருநாள் போட்டிகளில் 31 போட்டிகளில் இந்தியாவும், 8 போட்டிகளில் வங்கதேச அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.