வெறும் 13.1 ஓவரில் இலக்கை அடித்து வங்கதேசம் அபார வெற்றி..! அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்று அசத்தல்

By karthikeyan VFirst Published Mar 23, 2023, 6:11 PM IST
Highlights

அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 102 ரன்கள் என்ற இலக்கை வெறும் 13.1 ஓவரில் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்தது. முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி மழையால் முடிவு எட்டப்படவில்லை.

கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் இந்த கடைசி போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

IND vs AUS: இந்திய அணியின் தோல்விக்கு இவங்கதான் காரணம்..! கேப்டன் ரோஹித் சர்மா பகிரங்க குற்றச்சாட்டு

வங்கதேச அணி:

தமிம் இக்பால் (கேப்டன்), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, ஷகிப் அல் ஹசன், டௌஹிட் ரிடாய், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹசன் மிராஸ், டஸ்கின் அகமது, எபடாட் ஹுசைன், நசும் அகமது, ஹசன் மஹ்மூத்.

அயர்லாந்து அணி:

ஸ்டீஃபன் டோஹனி, பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), ஹாரி டெக்டார், லார்கன் டக்கெர் (விக்கெட் கீப்பர்), கர்டிஸ் காம்ஃபெர், ஜார்ஜ் டாக்ரெல், ஆண்டி மெக்பிரைன், மார்க் அடைர், கிரஹாம் ஹூம், மேத்யூ ஹம்ஃப்ரேஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக காம்ஃபெர் 36 ரன்களும், டக்கெர் 28 ரன்களும் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்திலோ அல்லது ரன்னே அடிக்காமலோ வெளியேறியதால் 28.1 ஓவரில் வெறும் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அயர்லாந்து அணி.

விராட் கோலியே நேரில் வந்து கேட்டுகிட்டதால் தான் விண்ணப்பித்தேன்! ஆனால்..கோச் பதவி குறித்து மௌனம் கலைத்த சேவாக்

102 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் தமிம் இக்பால் ஆகிய இருவரும் இணைந்து அடித்து ஆடி வெறும் 13.1 ஓவரில் இலக்கை அடித்துவிட்டனர். லிட்டன் தாஸ் 38 பந்தில் 50 ரன்களும், தமிம் இக்பால் 41 ரன்களும் அடிக்க, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

click me!